»   »  அதிமுக பிரச்சாரத்துக்கு வருவாரா எஸ்.வி.சேகர்?!

அதிமுக பிரச்சாரத்துக்கு வருவாரா எஸ்.வி.சேகர்?!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து இரு கட்சிகளையும் சேர்ந்த திரைப்படநடிகர், நடிகையர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதிமுகவின் சார்பில் பிரச்சார பீரங்கியான குண்டு கல்யாணம், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், தாமு, பாண்டியன், நடிகைகள்பிந்துகோஷ், சி.ஆர்.சரஸ்வதி, வாசுகி ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள்.

திமுக சார்பில் நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன் ஆகியோர் களமிறங்குகின்றனர். இரு தொகுதிகளிலும் 3 நாட்களுக்குசரத்குமார் பிரசாரம் செய்கிறார். அதேபோல, நெப்போலியன், கும்மிடிப்பூண்டியில் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும்பிரசாரம் செய்கிறார்.

இவர்கள் தவிர சினிமா வாய்ப்பே சுத்தமாக இல்லாத சந்திரசேகர், தியாகு, குமரிமுத்து ஆகியோரும் திமுகவுக்காக பிரசாரம்செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை அதிமுகவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தில் எஸ்.வி.சேகர் ஈடுபடுவரா என்பது தெரியவில்லை.

காஞ்சி மடத்தின் தீவிர பக்தரான இவர், சங்கராச்சாரியார்களின் கைதுக்குப் பின் தீவிர அமைதி காத்து வருகிறார். தனது டிரேட்மார்க் காவி கலர் க்ரோக்கடைல் டி-சர்ட்டுக்கும் விடை கொடுத்துவிட்டு அம்மாவுக்குப் பிடித்த பச்சை வண்ணம் உள்ளிட்டடி-சர்ட்களில் வலம் வருகிறார்.

பெரியவர், இளையவரை தரிசிக்க சென்று வந்த அதே காஞ்சியில் இப்போது அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார் எஸ்.வி.சேகர்.

இதனால் அவர் பிரச்சாரத்துக்குப் போவாரா அல்லது வேறு எங்காவது நாடகத்தை பிக்ஸ் செய்துவிட்டு அலேக் ஆவாரா என்றுதெரியவில்லை.

தேர்தல் பிரச்சார விஷயத்தில் சேகரின் நடவடிக்கையை அதிமுக தலைமை தீவிரமாக கண்காணிக்கப் போவது மட்டும் உறுதி.

Please Wait while comments are loading...