»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சன் டிவியின் இளமை புதுமையில் அறிமுகமாகி, மணி ரத்னத்தின் அலை பாயுதே மூலம் சினிமாவுக்கு வந்தார்ஸ்வர்ணமால்யா.

அடுத்தடுத்து சினிமா வாய்ப்புக்களை எதிர்பார்த்து டிவி நிகழ்ச்சிகளில் இருந்து மெதுவாக ஒதுங்கினார்.

ஆனால்,எல்லாமே அக்கா சான்ஸ்களாக வரவே கும்பிடு போட்டுவிட்டு அமெரிக்காவில் வசிக்கும் தமிழரை திருமணம்செய்து கொண்டு போனார்.

அங்கே போன ஸ்வர்ணமால்யா நன்றாகவே மெலிந்து, ஸ்லிம் ஆகி, ட்ரிம் ஆகி திரும்பி வந்தார்.

இனி நடிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் சான்ஸ் வேட்டையில் இறங்கியதற்கு பலன்கிடைத்தது.

விஜய்காந்த்தின் எங்கள் அண்ணா படத்தில் அவருக்குத் தங்கையாக பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்துமுடித்திருக்கிறார்.

தொடர்ந்து வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர்களின் அலுவலகங்களில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்.

போகும் இடங்களில் எல்லாம் அக்கா வேஷம், தங்கச்சி வேஷம்னு ஒதுக்கிறாதீங்க, கவர்ச்சியாக நடிக்க சான்ஸ்கொடுங்கள் என்று கேட்கிறாராம்.

சான்ஸ் குடுத்து பாருங்க.. கவர்ச்சியில் கலக்குறேன் என்று இறங்கி வந்திருக்கும் ஸ்வர்ணமால்யாவுக்கு இதுவரைஎந்தத் தயாரிப்பாளரும் சாதகமாக பதில் தந்ததாய் தெரியவில்லை.

ஆனாலும் முயற்சியில் தளராமல் தொடர்ந்துதனது சான்ஸ் வேட்டையில் தீவிரமாய் இறங்கியிருக்கிறார் ஸ்வர்ணமால்யா.

ஸ்வர்ணமால்யாவுக்கு என்ன ஆச்சு?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil