»   »  தமிழ் சினிமா -2007

தமிழ் சினிமா -2007

Subscribe to Oneindia Tamil
Manoj with Nandhana

2007ல் வெளியான மொத்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை -111.

இதில் நேரடியாக தமிழில் தயாரானவை - 99

டப்பிங் ஆகி வந்த படங்கள் - 12

அதிக படங்களில் நடித்த நாயகன் - சத்யராஜ்
பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, அடாவடி, கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார்.

அதிக படங்களில் நடித்த நாயகி - பாவனா
ஆர்யா, தீபாவளி, ராமேஸ்வரம், கூடல் நகர் என நான்கு படங்களில் அவர் நடித்துள்ளார்.

அதிக படங்களில் நடித்த காமெடியன் - வடிவேலு
வடிவேலு நடித்த மொத்தப் படம் 9.

ரீமிக்ஸ் மோகம்:

2007ல் தமிழ் சினிமாவை அதிகம் ஆக்கிரமித்திருந்தது ரீமிக்ஸ் மோகம். தமிழில் ஹிட் ஆன படங்களையும் பாடல்களையும் ரீமிக்ஸ் செய்ய பெரும் கூட்டமே களத்தில் குதித்தது.

முதலில் நான் அவனில்லை ரீமேக் படம் வெளியானது, வெற்றியும் பெற்றது. அதேபோல ஏகப்பட்ட சூப்பர் ஹிட் தமிழ்ப் பாடல்கள் ரீமிக்ஸ் ஆகி காதுகளைக் கிழித்தன.

பிரஷாந்த் - கிரகலட்சுமி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் சினிமா நிகழ்வுகளில் ஒன்று. இன்று வரை அதற்கு முடிவே ஏற்படாமல் நீண்டு கொண்டிருக்கிறது.

அதேபோல நடிகை காவேரி, ஒளிப்பதிவாளர் வைத்தி விவகாரமும் வருடக் கடைசியல் வெடித்து தீர்வு காணாமல் இழுபறியாக உள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவியார் கமலா அம்மாளின் மறைவும் திரையுலகை கலங்கடித்தது.

நடிக்ர ஜீவா கல்யாணம் செய்து கொண்டார். சொந்தக்காரப் பெண் சுப்ரியாவை டெல்லியில் வைத்துக் கரம் பிடித்த அவர் சென்னையில் சிறப்பான வரவேற்பையும் நடத்தினார்.

சூர்யாவை மணந்து தாயானார் ஜோதிகா. அழகான அந்தப் பெண் குழந்தைக்கு தியா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் சிவக்குமார் குடும்பத்தினர்.

இதேபோல நடிகர் மனோஜின் மனைவி நடிகை நந்தனாவுக்கும் அழகான பெண் குழந்தை பிறந்து பாரதிராஜா குடும்பத்தை மகிழ்வித்தது.

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கேமராமேனும் அழகான படங்களை இயக்கியவருமான ஜீவா படப்பிடிப்பின்போது ரஷ்யாவில் காலமானார்.

2007ல் தமிழ் சினிமா பல ஏற்றங்களையும் கண்டது, சில குழப்பங்களையும் கண்டது, பரபரப்புகளையும் பார்த்தது. 2008ல் விஸ்வரூப வளர்ச்சிையக் கண்டு, மேலும் பீடு நடை போட வாழ்த்துவோம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil