»   »  நான் சொன்னா செய்வேன்.. செஞ்சுருவேன்.. பட்டையைக் கிளப்பிய கோலிவுட் பன்ச்சுகள்!

நான் சொன்னா செய்வேன்.. செஞ்சுருவேன்.. பட்டையைக் கிளப்பிய கோலிவுட் பன்ச்சுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா என்றாலே பன்ச் வசனம்தான் முதலில் நினைவுக்கு வரும். குறிப்பாக உச்ச நடிகர்களின் படங்கள் பன்ச் வசனம் இல்லாமல் வந்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

அந்த வகையில் சமீப காலத்தில் வெளியான சில முக்கியப் படங்களில் இடம் பெற்ற வசனங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டன என்று சொல்லலாம்.

"குட்டி சுட்டீஸ்கள்" எல்லாம் பன்ச் அடிப்பதைப் பார்த்து பன்ச் நாயகன் ரஜினி அதை ரொம்ப காலத்திற்கு முன்பு விட்டு விட்டார். ஆனால் அவரே இப்போது கபாலிடா என்று சொன்ன ஒற்றை வசனம் இன்று சர்வதேச அளவில் கலகலக்க வைத்து வருகிறது.

மொட்ட சிவா கெட்ட சிவாடா...

மொட்ட சிவா கெட்ட சிவாடா...

ராகவேந்திர லாரன்ஸை பெரும் ஹீரோவாக்கிய படம் .... இப்படத்தில் லாரன்ஸ் பேசிய மொட்ட சிவா கெட்ட சிவாடா என்ற வசனம் ரொம்ப பாப்புலர். குட்டீஸ்கள் எல்லாம் இதைச் சொல்லி டெர்ரர் ஆக்கும் அளவுக்கு பிரபலமாகி விட்டது.

தெறிக்க விடலாமா...

தெறிக்க விடலாமா...

அஜீத்தின் வேதாளம் படத்தில் இடம் பெற்ற தெறிக்க விடலாமா என்ற பன்ச் வசனத்தைப் பேசாத வாய்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு இன்னும் கூட பாதிப்பை ஏற்படுத்த தவறாத வசனம் அது.

நான் சொன்னா செய்வேன்...

நான் சொன்னா செய்வேன்...

கமல்ஹாசன் தூங்காவனம் படத்தில் பேசிய வசனம் இது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹிட்டான கமல் வசனம் இது என்பதால் இன்று வரை பிரபலமாகவே உள்ளது.

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்...

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்...

தெறி படத்தில் விஜய் பாடிய ரைம்ஸ் இது. ஆனால் பன்ச் வசனம் போல இதுவும் பட்டையைக் கிளப்பியது. விஜய் ரசிகர்களின் செல்ல வசனமாகவும் மாறிப் போனது.

ஐ அம் வெயிட்டிங்...

ஐ அம் வெயிட்டிங்...

இது துப்பாக்கி படத்தில் இடம் பெற்று சூப்பர் ஹிட் ஆன வசனம். தொடர்ந்து கத்தியிலும் இதே வசனத்தை பயன்படுத்தியிருப்பார்கள். விஜய் ரசிகர்களைத் தாண்டி பிறரையும் கூட இம்பாக்ட் செய்த வசனம் இது.

செஞ்சுருவேன்...

செஞ்சுருவேன்...

குட்டிப் பசங்க முதல் பெரியவர்கள் வரை இந்த வசனத்தை உச்சரிக்காத வாய்களே இருக்க முடியாது. சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு தனுஷ் மாரி படத்தில் பேசிய வசனம் இது. செம பிரபலம். மாஸாக பரவிய பன்ச்சும் கூட.

English summary
These are some famous punch dialogues in Tamil cinema.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil