twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ”தேவர் மகன்” என்று பெயர் வையுங்கள்: கமலிடம் சொன்ன இளையராஜா!

    |

    சென்னை: சில வெற்றிபெற்ற தமிழ்த் திரைப்படங்களின் ஒரிஜினல் பெயர்களை தெரிந்துகொள்வோம்.

    பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு கதையை தயார் செய்யும்போதே படத்தின் தலைப்பு முடிவு செய்துவிடுவது தான் வழக்கம். ஆனால் சமீப காலங்களாக பெயரிடப்படாமல் ஒரு படத்தை இயக்கிவிட்டு இறுதியில் படத்தின் பெயரை வெளியிடுவது ட்ரெண்டாகி வருகிறது. அதை ட்ரெண்ட் என்று சொல்வதைவிட, ஒரு வகை வியாபார யுக்தி என்று சொல்லலாம். ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை, பெயர் யோசிக்கவில்லை என ரகசியமாக விளம்பரப்படுத்திவிட்டு, அந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பிறகு தலைப்பை அறிவிக்கும் யுக்தி.

    சண்டியர் விருமாண்டியானதும், ரோபோ எந்திரனானதும் தெரிந்த கதை. சர்ச்சையாகாமல் பல திரைப்படங்களுக்கு ஆரம்பத்தில் ஒரு பெயர் முடிவு செய்யப்பட்டு, பிறகு மாற்றம் செய்யப்படிருக்கின்றன. அவற்றில் சில முக்கிய படங்களை தற்போது பார்க்கலாம்.

    இரும்புக்குதிரை

    இரும்புக்குதிரை

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் திவ்யா, கிஷோர் மற்றும் பலர் நடித்து 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொல்லாதவன். வணீக ரீதியாக வெற்றிபெற்ற இத்திரைப்படம் தான் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணிக்கு அடித்தளம் இட்டது. இப்படத்திற்கு முதலில் வெற்றிமாறன் வைத்த பெயர் இரும்புக்குதிரை. பிறகு அதைவிட சிறந்த பெயர் வேண்டுமென்று தேர்வு செய்யப்பட்டது தான் பொல்லாதவன். படத்தை பார்த்த நம்மால் ஏன் பொல்லாதவன் என பெயர்மாற்றம் செய்தார்கள் என புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?

    காக்க காக்க

    காக்க காக்க

    நாங்க மொத்தம் நாளு பேரு... என்று அந்த வசனத்தைக் கேட்டாலே நரம்பெல்லாம் முறுக்கேறும் படம் காக்க காக்க. சூர்யா, ஜோதிகா நடிப்புக்கு இணையாக, வில்லன் ஜீவனுக்கு கௌதம் மேனன் பின்னணி குரல் கொடுத்து கலக்கிய திரைப்படம். வில்லனாக இருந்தாலும், அடுத்தவன் மனைவியைத் தொடமாட்டான் என கண்ணியம் காத்த கதாபாத்திரைத்தை உருவாக்கிய கௌதம் மேனன் அப்படத்திற்கு முதலில் வைத்த பெயர் "முன்குறிப்பு". இந்த பேரை கேட்ட உடனே எவ்வளவு காமெடியா இருக்கு? அதுனாலதான் அவரே காக்க காக்க என்று மாற்றிவிட்டார்.

    கஜினி

    கஜினி

    ஏஆர்.முருகதாசை ஒரு வித்தியாசமாக சிந்திக்கும் இயக்குனர் என அடையாளப்படுத்திய திரைப்படம் கஜினி. கஜினி மொஹம்மது 17 முறை படையெடுத்த மாதிரி, ரொம்ப கவனமா ஒவ்வொருத்தர் பெயரையும் உடல் முழுக்க எழுதிகிட்டு சூர்யா பழிவாங்குன படம். இந்த படத்துக்கு முதல்ல வச்ச பெயர் "மிரட்டல்". அந்த பெயரிலேயே படம் ரீலீஸ் ஆகியிருந்தா டோனி ஜா நடித்த மிரட்டல் அடியோட அடுத்த பார்ட் போல என எளிய தமிழ்ப்பிள்ளைகள் குழம்பியிருப்பார்கள். சுதாரித்துக்கொண்ட முருகதாஸ் கஜினின்னு பெயரை மாத்தி காப்பாத்திட்டார் பாஸ்.

    ஜெமினி

    ஜெமினி

    ஓ போடு என... நாட்டமை படத்தில் சோப்பு போட்ட டீச்சர் நடிகையை லேட்டஸ்ட் வெர்ஷனாக காட்டிய திரைப்படம் ஜெமினி. சரண் இயக்கத்தில் விக்ரம், கிரண் நடித்து 2002ல் வெளிவந்தது. இப்படத்திற்கு முதலில் வைத்த பெயர் ஏறுமுகம். அப்புறம்தான் ஜெமினி என மாற்றினார்கள்.

    அகிலன்

    அகிலன்

    விக்ரமின் திரைவாழ்க்கை மற்றும் பாலாவின் வாழ்க்கை இரண்டையுமே மாற்றிய திரைப்படம் சேது. இந்த படத்திற்கு பாலா முதலில் வைத்த பெயர் அகிலன். பிறகுதான் சேது என பெயர் மாற்றம் செய்தார்.

    நம்மவர்

    நம்மவர்

    கமல்ஹாசனுடைய ஹிட் படங்களில் முக்கியமான ஒரு படமாக இருப்பது தேவர் மகன். கமல்ஹாசன், சிவாஜி, கௌதமி, ரேவதி, நாசர் என எல்லோருக்கும் சிறப்பான பங்களிப்பை கொடுத்த படம். இந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் நம்மவர். ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா, இதற்கு "தேவர் மகன்" என பெயர் வையுங்கள் என கமலிடம் சொல்ல, அதை ஏற்றுக்கொண்டு பெயர்மாற்றம் செய்தார் கமல்ஹாசன்.

    காசிமேடு

    காசிமேடு

    செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்து இன்றளவும் பேசப்படும் முக்கியமான படம் புதுப்பேட்டை. இந்த படத்திற்கு முதலில் காசிமேடு என பெயர் வைத்தார்கள். பிறகுதான் செல்வராகவன் புதுப்பேட்டை என பெயர் மாற்றம் செய்தார்.

    இதேபோல், 16 வயதினிலே திரைப்படத்திற்கு "மயில்" என்றும், அச்சம் என்பது மடமையடா திரைப்படத்திற்கு " சட்டென்று மாறுது வானிலை" எனவும் பெயர் வைக்கப்பட்டு பிறகு மாற்றப்பட்டது. இதேபோல் உங்களுக்கு தெரிந்த பெயர் மாற்றம் செய்யப்பட்ட படங்களை கமெண்ட்ஸ் பிரிவில் பட்டியலிடுங்கள்.

    English summary
    Here we see the original titles of popular Tamil films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X