»   »  வக்கீலான தனுஜா பைனான்சியர்

வக்கீலான தனுஜா பைனான்சியர்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

பைனான்சியர் குந்தன்ஷாவிடம் எக்கச்சக்க பணத்தைக் கறந்து மோசடி செய்து விட்டதாக புகார் கூறப்பட்டு பரபரப்புக்குள்ளான நடிகை தனுஜா இப்போது நடிப்பை விட்டு விட்டு வக்கீல் தொழில் பார்க்கப் போய் விட்டார்.

சட்டக் கல்லூரி மாணவியான தனுஜா, சினிமா பைனான்சியர் பியாரிலால் குந்தன் ஷாவால் சினிமாவுக்குக் கொண்டு வரப்பட்டார்.

அவர் நடித்தது ஒரே ஒருபடம்தான். ஆனால் அதற்குள் ஏகப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியவர் தனுஜா.

தனுஜாவின் முதல் படம் வெளியாவதற்குள்ளேயே அவருக்கும், குந்தன் ஷாவுக்கும் முதலில் பற்றிக் கொண்டு பின்னர் முட்டிக் கொண்டனர்.

சென்னை போலீஸ் கமிஷனரிடம் சென்று தனுஜா குறித்து பரபரப்பு புகார்களை தெரிவித்தார் ஷா.

என்னிடம் பல கோடி பணத்தைக் கறந்து விட்டார் தனுஜா. மேலும் மேக்கப் சாமான்கள், டிரஸ்கள் என ஏகப்பட்ட ஐட்டங்களை என்னோட பணத்தில் வாங்கிய அவர், விஜய்யின் கால்ஷீட் வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் பணத்தை என்னிடமிருந்து பெற்று மோசடி செய்து விட்டார்.

தனுஜாவுக்கு பலருடன் தொடர்பு உள்ளது என புகார்களை அள்ளி வீசினார் குந்தன் ஷா.

தனுஜாவும் விடாமல், என்னை கற்பழிக்க முயன்றார் குந்தன் ஷா. என்னை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார் என்று தன் பங்குக்கு புகார்களை அள்ளித் தெளித்தார்.

இதில் விசேஷம் என்னவென்றால் தனுஜாவுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் முழு சப்போர்ட் ஆக இருந்தார் என்றும் ஒரு செய்தி கிளம்பியது.

இப்படிப்பட்ட புண்ணியவதியான தனுஜா இப்போது நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டாராம். பதிலாக, வக்கீல் தொழில் பார்க்க போய் விட்டார்.

இன்னொரு முக்கியமான சமாச்சாரம், யாரால் தனக்கு சினிமாவில் மார்க்கெட் போனதோ, அதே குந்தன் ஷாவுடன், தனுஜா இப்போது சமரசமாகி விட்டாராம்.

குந்தன் ஷா இப்போது தன்னிடம் கடன் வாங்கியிருக்கும் பார்ட்டிகளை மிரட்ட தனுஜாவை விட்டுத்தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அந்த அளவுக்கு இரண்டு பேரும் ராசியாகி விட்டார்களாம். ஒருவர் மீது ஒருவர் கொடுத்த புகார்களை வாபஸ் வாங்கி குப்பைக் கூடையில் வீசி விட்டு ஹாயாக இருக்கிறார்களாம்.

குந்தன் ஷாவை இப்போதெல்லாம் பெரும்பாலும் தனுஜாவின் வீட்டில்தான் பார்க்கமுடிகிறதாம். சினிமாவில் இதெல்லாம் ரொம்ப ரொம்ப சகஜம்.

Read more about: preview, tanuja

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil