»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தனுஷ் நடிக்கும் ராகவா படத்தில் அறிமுகமாகிறார் மம்தா.

20 வயதே ஆன தனுசுக்கு ஹீரோயின் தேடுவது ரொம்பப் பிரச்சனையாக இருக்கிறதாம். 18 வயசுக்குள் யாராவதுசிக்குவார்களா என அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒல்லியாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் இளமைச்செழிப்பும் துள்ளலும் வேண்டும்.

அப்படி ஒரு இளம் மொட்டைத் தேடி மும்பை போன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் கண்ணில் பட்டவர்தான் இந்த மம்தா. இவரும் மாடல் தான். சிம்ரனுடன் ஜீவா சோப் விளம்பரத்தில் நடித்தவர். மேலும் சிலநிறுவனங்களின் கேலண்டர்களுக்கு போய் தந்திருக்கிறார்.

கவர்ச்சியாக நடிக்க, டிரான்ஸ்பரன்ட் உடையில் மழையில் நனைந்து பாட்டு பாட என எதற்கும் தயார் என அடித்துசத்தியம் செய்து சொன்னதால் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். விரைவில் சூட்டிங் ஆரம்பிக்கப்போகிறது.

இதற்கிடையே தனுஷ் நடிக்கும் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படப்பிடிப்பு படு வேகமாக நடந்துவருகிறது.

இந்தப் படத்திலும் மன்மத ராசா.. வேகத்துக்கு இணையாக ஒரு கலக்கல் டான்ஸ் உண்டாம். அந்த ஆட்டத்துக்குதாரிகாவைப் பிடித்துப் போட்டுள்ளார்கள். கன்னடத்தில் குண்டக்க மண்டக்க சீன்களில் நடித்தவர் என்பதால்இதிலும் பெயருக்கு ஒரு சேலையை உடலெங்கும் சுற்றிக் கொண்டு ஆட்டமோ ஆட்டம் போட்டுள்ளாராம்.

இந்தப் பாடலின் சில வரிகளை தனுசும் பாடியுள்ளாராம். யுவன்சங்கர் ராஜா இசையில் இது இன்னொரு படு ஹிட்பாடலாக அமையும் என்கிறார்கள் டியூனைக் கேட்டவர்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil