»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இதோ தமிழ் நாட்டை நோக்கி அடித்துள்ள இன்னொரு தென்றல்,

இந்த இளமைக் கொண்டாட்டத்தின் பெயர் தாரிகா. நடித்து வருவது காதல் சரிகம என்ற படத்தில். மும்பையில்இந்தி சினிமா உலகில் புக நினைத்து ஆல்பங்களை இவர் ரவுண்டில் விட, ஒரு ஆல்பம் நம் ஆட்கள் சிக்கிவிட,கூப்பிட்டு அனுப்பி விட்டார்கள்.

தமிழில் தொடர்ந்து நடிக்க சான்ஸ் கிடைத்தால் நான் இந்திப் பக்கமே போக மாட்டேன் என்கிறார்.

முன்பு, தெலுங்கில் நுழைய முயன்று தோற்றதாகவும் ஒரு தகவல். அது உண்மையா தாரிகா?

சூப்பர் பாராட்டிய செல்வராகவன்!

கஸ்தூரி ராஜாவின் மகன் செல்வராகவன் ரொம்ப சந்தோஷத்தில் உள்ளார்.

டைரக்ட் செய்தது காதல் கொண்டேன் என்ற ஒரே படம் மட்டும் தான். ஆனால், அந்த ஒரு படமே இவரை வெகுஉச்சத்தில் தூக்கிப் போய் வைத்துவிட்டது. இன்டஸ்ட்ரியில் மிக நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.

இந் நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்த ரஜினியிடம் இருந்து செல்வராகவனுக்கு போன். உடனே ரஜினிவீட்டுக்குப் போன செல்வராகவனை, பாராட்டித் தள்ளிவிட்டாராம்.

ரொம்ப நல்லா பண்ணியிருக்கே, கை தேர்ந்த டைரக்டர்களுக்கு மட்டுமே இதுபோன்ற கதையை கையாள வரும்.நீ அசத்திட்டே என்றாராம்.

உணர்ச்சிவசத்தில் கண் கலங்கியபடியே வெளியே வந்துள்ளார் செல்வராகவன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil