»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹீரோயின் கனவோடு ஆந்திராவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் தேஜாஸ்ரீ.

நினைத்தது நடக்கவில்லை. சின்னச் சின்ன ரோல்களுக்கே கூப்பிட்டார்கள்.

அவற்றையெல்லாம் ஒதுக்கிக்கொண்டிருந்தார். இந் நிலையில் ஒற்றன் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடக் கூப்பிட்டார்கள்.

இதில் பணமும் ஜாஸ்தி, கஷ்டமும் கம்மி என்பதால் வந்து ஆடிவிட்டுப் போனார். சின்ன வீடா வரட்டுமா, பெரியவீடா வரட்டுமா என்ற அர்த்தம் நிறைந்த பாடலுக்கு இவர் அவிழ்த்துப் போட்டு ஆடிய ஆட்டம் பெரும்வரவேற்பைப் பெற்றுவிட்டது.

சமீப காலத்தில் மன்மத ராசாவுக்குப் பின் அதிகப்படியான வரவேற்பைப் பெற்ற டப்பாங்குத்து டான்ஸ் இது தான்.

விடுவார்களா நம்மவர்கள். படமெடுக்க பிலிம்ரோல் வாங்கிய கையோடு தேஜாஸ்ரீ வீட்டுக்குப் போய் ஒருபாட்டுக்கு டான்ஸ் ஆட கால்ஷீட் கேட்க ஆரம்பித்துள்ளார்கள் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும்.

இன்னும் ஹீரோயின் கனவை கைவிடாத தேஜாஸ்ரீயோ வாய்ப்புக்களை விரட்டிவிட்டு கதவைச் சாத்தி வருகிறார்.இதனால் சின்ன ரோலும் தர்றோம் என்று சொல்லி படங்களில் புக் செய்து வருகிறார்கள்.

அப்படி இவருக்குக் கிடைத்துள்ள சின்ன ரோல்-கம்- டப்பாங்குத்து டான்ஸ் சான்ஸ் தான் ஜூட். ஸ்ரீகாந்த்-மீராஜாஸ்மீன் நடித்து வரும் இந்தப் படத்தில் கவுச்சி (கவர்ச்சி) கொஞ்சம் கம்மியாக இருப்பதாக நினைத்த டைரக்டர்அழகம்பெருமாள் தேஜாஸ்ரீயைப் பிடித்துப் போட்டுள்ளார்,

இதேபோல பல சின்ன ரோல்களுடன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வாய்ப்புக்கள் நிறையவே வருவதால்,ஹீரோயின் ஆசையை டெட்டால் போட்டுக் கழுவிட்டு முழு நேர டான்சில் மிக சீக்கிரத்திலேயே குதித்து விடுவார்என்கிறார்கள் கோடம்பாக்கம் குருவிகள்.

எது எப்படியோ சம்பளத்தில் ரொம்பத் தெளிவாக இருக்கிறாராம். முதலில் காசை வாங்கிக் கொண்டு தான் அடுத்தபேச்சே பேசுகிறாராம் தேஜாஸ்ரீ. சம்பளமும் கொஞ்சம் நியாயமாக இருக்க வேண்டும் என்கிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil