»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

துள்ளுவதோ இளமை படத்தின் அசகாய வெற்றியைத் தொடர்ந்து கஸ்தூரி ராஜா உருவாக்கி வரும் காதல் சாதிபடத்தில் அனைத்துப் பாடல்களையும்

இளையராஜாவே எழுதியுள்ளாராம். இசையும் அவரே.

ஜெமினி என்ற டைட்டில் பெரும் வெற்றி பெற்றதால் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்திற்கு இன்னொரு பிரபலஸ்டுடியோ பெயரான வாஹினி என்று பெயர் வைத்துள்ளனர். விட்டால் கொலம்பியா பிக்சர்ஸ் என்று கூட படத்துக்குபெயர் வைப்பார்கள்.

காமெடி நடிகர் மயில்சாமி புதிதாக போர்டு கார் வாங்கியுள்ளார். சன் டிவி காமெடி டைம் கொடுத்த விளம்பரத்தால்கிடைத்த பட வாய்ப்புகள் தான் காரணமாம்.

இனிமேல் படங்களில் ஒரு பாட்டுக்கு எல்லாம் ஆட மாட்டாராம் லாரன்ஸ் ராகவேந்தர். அவர் ஹீரோஆகிவிட்டதாக நினைத்துக் கொண்டுள்ளாராம்.

தனது மகன் சூர்யாவுக்கும் யோகா கற்றுத்தர ஆரம்பித்திருக்கிறாராம் நடிகர் சிவக்குமார். தன்னைப் போலவேசூர்யாவும் என்றும் 16ஆக இருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.

ஜெயா என்ற படத்தில் ரம்யா கிருஷ்ணனோடு இன்னொரு ஹீரோயினாக துள்ளுவதோ இளமை புகழ் ஷெரீன்ரெட்டி நடிக்கவுள்ளார். படத்தில் கவர்ச்சிக்குத்தான் முதலிடம்.

தேவன் படத்தில் பல நடிகர்களை கேலி செய்வது போல விவேக் நடித்துள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.விவேக்கை கண்டிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கவும் சம்பந்தப்பட்டவர்கள் முடிவுசெய்துள்ளார்கள். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரைக் கூட விவேக் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: barathiraja, cinema, ilayaraja, vairamuthu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil