»   »  ராஜு சுந்தரம்-அஜீத்தின் 'அக்பர்'

ராஜு சுந்தரம்-அஜீத்தின் 'அக்பர்'

Subscribe to Oneindia Tamil


ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு வைக்கப்பட்டிருந்த அக்பர் என பெயரிட்டுள்ளனர். ஷ்ரியா அஜீத்துக்கு ஜோடி போடுகிறார்.

Click here for more images

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் படு சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். படம் ரிலீஸுக்கு கிட்டத்தட்ட ரெடியாகி விட்டதாம்.

தீபாவளிக்கு பட்டாசாக பொறிந்து தள்ளப் போகிறது பில்லா. இப்படத்தை அஜீத் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகமும் வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.

இந் நிலையில் ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிக்க அஜீத் தலையாட்டியுள்ளார்.

இப்படத்தை பல படங்களில் அஜீத்தை டான்ஸ் மாஸ்டராக ஆட்டுவித்த ராஜு சுந்தரம் இயக்கப் போகிறார். அஜீத்திடம் படத்தின் கதையை ராஜு சுந்தரம் சொல்லியுள்ளார். கேட்டவுடன் அஜீத்துக்குப் பிடித்து விட்டதாம். ஓ.கே. சொல்லி விட்டார்.

இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஷ்ரியா நடிக்கவுள்ளார். முதல் முறையாக இருவரும் இணைகிறார்கள்.

படத்துக்கு அக்பர் என பெயரிட்டுள்ளனர். தலைப்பும் கூட அஜீத்துக்குப் பிடித்து விட்டதாம். தலைப்பைச் சொல்லியவர் ராஜு சுந்தரம்தான். நல்லா, பவர்ஃபுல்லா இருக்கே என்றாராம் அஜீத்.

படத்தில் என்னென்ன வித்தியாசமான விஷயங்ளை சேர்க்க முடியுமோ யோசித்து வையுங்கள், திட்டமிட ஆரம்பியுங்கள் என்று ராஜு சுந்தரத்திடம் கூறியுள்ளாராம் அஜீத்.

அனேகமாக டிசம்பர் மாத மத்தியில் அக்பர் படத்தின் ஷூட்டிங் தொடங்கக் கூடும் எனத் தெரிகிறது.

அப்ப, பொங்கலுக்கு 'தல' ரசிகர்களுக்கு அக்பர் 'பிரியாணி'!!

Read more about: akbar, raju sundhram

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil