»   »  தலை தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை நட்சத்திரங்கள்

தலை தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை நட்சத்திரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரையில் இந்த ஆண்டு நிறைய ஜோடிகள் தலை தீபாவளி கொண்டாடப் போகின்றனர். கல்யாணம் முதல் காதல்வரை அமித்பார்கவ் தொடங்கி சரவணன் மீனாட்சி மைனா வரை இந்த ஆண்டு புது ஜோடிகள் தலை தீபாவளி கொண்டாட தயாராகி வருகின்றனர்.

சின்னத்திரையில் சீரியலில் ஒன்றாக நடிப்பவர்களும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் காதல் திருமணம் செய்து கொள்வது சாதாரண விசயமாகிவிட்டது. மர்மதேசம் ஜோடி சேத்தன் தேவதர்ஷினி தொடங்கி இன்றைக்கு அமித்பார்க்கவ் ஸ்ரீரஞ்சனி திருமணம் வரை பல சின்னத்திரை ஜோடிகள் காதலித்து திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்தான்.

இந்த ஆண்டு அமித்பார்க்கவ், ஸ்ரீரஞ்சனி , கணேஷ் வெங்கட்ராம், நிஷா கிருஷ்ணன், கயல் சந்திரன் அஞ்சனா ஆகியோருடன் இயக்குநர் ராஜூ முருகன் தொகுப்பாளினி ஹேமா சின்ஹாவும் தலை தீபாவளி கொண்டாடப் போகின்றனர்.

கணேஷ் வெங்கட்ராம் - நிஷா கிருஷ்ணன்

கணேஷ் வெங்கட்ராம் - நிஷா கிருஷ்ணன்

வேந்தர் டிவியில் திருமண நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போய் திருமண பந்தத்தில் இணைந்த இந்த ஜோடிக்கு இந்த ஆண்டுதான் தலை தீபாவளியாம்.
பாரம்பரிய முறைப்படி தலை தீபாவளி கொண்டாட தயாராகி விட்டது இந்த ஜோடி.

கயல் சந்திரன் அஞ்சனா

கயல் சந்திரன் அஞ்சனா

கயல் பட நாயகன் சந்திரனும், சன் டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளினி அஞ்சனாவும் காதலித்து கடந்த மார்ச் 10ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். உற்சாக கொண்டாட்டத்திற்கு நடுவே இந்த ஜோடி இப்போது தலை தீபாவளி கொண்டாடப் போகிறது.

அமித்பார்கவ் ஸ்ரீரஞ்சனி

அமித்பார்கவ் ஸ்ரீரஞ்சனி

கல்யாணம் முதல் காதல்வரை ஹீரோ அமித் தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனியுடன் காதலில் விழுந்தார். இந்த ஜோடி, இந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி கல்யாண பந்தத்தில் இணைந்தது. இந்த ஆண்டு உற்சாகமாக தலை தீபாவளி கொண்டாட தயாராகி விட்டனர்.

சன் டிவி தியா மேனன் கார்த்திக்

சன் டிவி தியா மேனன் கார்த்திக்

சன் டிவி தொகுப்பாளினி தியா மேனன் சிங்கப்பூர் தொழிலதிபர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிங்கப்பூர் போனாலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியை தொடரும் இவருக்கு இந்த ஆண்டு தலை தீபாவளி.

ராஜூ முருகன் ஹேமா சின்ஹா

ராஜூ முருகன் ஹேமா சின்ஹா

குக்கூ, ஜோக்கர் பட இயக்குநர் ராஜுமுருகன், டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா என்பவரைக் காதலித்து செப்டம்பர் 4ம் தேதி கரம்பிடித்தார். சுஜிதா என்ற பெயரில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய சுஜிபாலா - பிரனேஷ் திருமணம் நடந்தது. இந்த ஜோடிகள் இந்த ஆண்டு தலை தீபாவளி

மைனா நந்தினி கார்த்தி

மைனா நந்தினி கார்த்தி

சரவணன் மீனாட்சி சீரியல் தோழி நடிகை மைனா நந்தினிக்கு இந்த ஆண்டு சொந்தக்கார மாப்பிள்ளை கார்த்தியுடன் திருமணம் நடைபெற்றது. சீரியலில் நடிப்பை தொடர்ந்து வருகிறார். மைனா தன் ஜோடியுடன் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடப் போகிறார்.

தலை தீபாவளி காணும் சின்னத்திரை நட்சத்திரங்கள் அத்தனை பேருக்கும் ஒன் இந்தியா தமிழின் ஹேப்பி தலை தீபாவளி வாழ்த்துக்கள் !!

English summary
In television celebrities,7 couples going to celebrate the thala deepavali festival 2016. Wish all of them to enjoy the thala diwali festival with family members.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil