Don't Miss!
- Sports
தோனி தான் எனக்கு ஃபர்ஸ்ட்.. அப்புறம் தான் நாடு.. சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் நெகிழ்ச்சி பேச்சு
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜெயம் ரவிக்காக விஜய் விட்டுக் கொடுத்த சூப்பர் ஹிட் படம்... எதுன்னு தெரியுமா ?
சென்னை : 2015 ல் மோகன் ராஜா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ஆக்ஷன் த்ரில்லர் படம், தனி ஒருவன். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்த இந்த படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீசாகி நேற்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
Recommended Video
இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், நாசர், தம்பி ராமைய்யா, முக்தா கோட்சே உள்ளிட்டோரும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டேராடூன், முசோரி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டது.
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு… 10 மாதத்திலேயே 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்!
ஐபிஎஸ் அதிகாரியான மித்ரன், அதிக குற்றங்கள் நடக்க காரணமான ஒருவனை கைது செய்வதை வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளார். விஞ்ஞானியான சித்தார்த் அபிமன்யு செய்யும் சட்ட விரோத மருத்துவ குளறுபடிகளை கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.

விஜய் விட்டுக் கொடுத்த கதை
அதற்கு முன் ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்த மோகன் ராஜா, முதல் முறையாக சொந்தமாக கதை எழுதிய இயக்கி படம் இது தான். 6 மாதங்களாக யோசித்து இந்த கதையை தயார் செய்துள்ளார் மோகன் ராஜா. விஜய்யை மனதில் வைத்து தான் மோகன் ராஜா இந்த கதையை தயார் செய்தார். ஆனால் கதையை கேட்ட பிறகு, இந்த கதையில் தான் நடிப்பதை விட, ஜெயம் ரவி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என விஜய்யே சொல்லி விட்டாராம்.

நயன்தாரா தான் கரெக்ட்
அதற்கு பிறகு தான் ஜெயம் ரவியிடம் பேசி உள்ளார். ஆனால் ஹீரோயின் ரோலுக்கு மோகன் ராஜாவின் ஒரே தேர்வு நயன்தாராவாக தான் இருந்துள்ளது. வில்லன் ரோலில் நடிக்க ஆர்யா, அர்ஜுன், மாதவன், அரவிந்த்சாமி, இர்ஃபான் கான் என பலரின் பெயர்கள் அடிபட்டது. இறுதியாக தான் அரவிந்த் சாமியை ஓகே செய்ததாக அறிவித்தார் மோகன் ராஜா. அனைவரையும் ஈர்க்கக் கூடிய சாந்தமான முகமாக இருக்க வேண்டும். அதே சமயம் வில்லத்தனமும் இருக்க வேண்டும் என யோசித்தார்களாம்.

குரல் கொடுத்த அரவிந்த்சாமி
படத்திற்கு டைட்டில் வைக்காமலேயே படத்தின் வேலைகளை துவக்கினர். படம் பாதி முடிக்கப்பட்ட பிறகு தான் டைட்டிலை உறுதி செய்தனர். இசை அமைக்கவும் தேவிஸ்ரீ பிரசாத், யுவன் சங்கர் ராஜா, தமன் என பலரிடமும் கேட்கப்பட்டு, இறுதியாகத் தான் ஹிப்ஹாப் தமிழாவை ஓகே செய்துள்ளனர். இந்த படத்திற்கான 5 பாடல்களையும் ஹிப்ஹாப் தமிழா தான் எழுதி உள்ளார். தீமை தான் வெல்லும் என்ற ப்ரோமோ பாடலுக்கு அரவிந்த்சாமியே வாய்ஸ் கொடுத்தார்.

பின் வாங்கிய சன் பிக்சர்ஸ்
முதலில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஜெயம் ரவியின் முந்தைய படங்கள் வரிசையாக தோல்வி படங்களாக அமைந்ததால், இந்த படத்தை தயாரிக்கும் முடிவிலிருந்து சன் பிக்சர்ஸ் பின்வாங்கியது. அதற்கு பிறகு தான் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பு பொறுப்பை ஏற்றது. பிறகு இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றியது.

100 கோடி வசூலித்த படம்
2015 ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. அமெரிக்காவில் மட்டும் 18 க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் ரிலீசானது. ரிலீசான முதல் நாளே தமிழகம் முழுவதும் ரூ.4.50 கோடிகளை வசூலித்தது. சென்னையில் முதல் வார இறுதியில் ரூ.1.28 கோடிகளை வசூலித்தது. தியேட்டரில் 50 நாட்கள் ஓடிய இந்த படம் முதல் 10 நாட்களிலேயே ரூ.40 கோடியை வசூலித்தது. மொத்தமாக உலகம் முழுவதும் ரூ.105 கோடிகளை வசூலித்ததாக கணக்கிடப்பட்டது. அந்த ஆண்டில் அதிகம் வசூலான டாப் 10 தமிழ் படங்களில் தனி ஒருவனும் ஒன்று.

பல மொழிகளில் ரீமேக்
தனி ஒருவன் படம் பிறகு தெலுங்கில் துருவ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ராம் சரண், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்தனர். வில்லன் ரோலில் அரவிந்த்சாமியே நடித்தார். பெங்காலியில் ஒன் என்ற பெயரிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் டபுள் அட்டாக் 2 என்ற பெயரில் டப் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது.

விரைவில் பார்ட் 2
இந்திய அளவில் 2015 ல் வெளியான டாப் 20 படங்களில் தனி ஒருவன் படமும் ஒன்றாக இருந்தது. தனிஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க மோகன் ராஜாவும், ஜெயம் ரவியும் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் அறிவிப்பு வெளியிடப்பட்டு, வேலைகள் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.