»   »  தங்கருக்கே 'ஒன்பது ரூபாய் நோட்டு'!!

தங்கருக்கே 'ஒன்பது ரூபாய் நோட்டு'!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sathyaraj

புதுச்சேரியில் விசிடி கடைகளில் ரெய்டு நடத்திய இயக்குநர் தங்கர் பச்சானிடமே, அவர் இயக்கிய ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தின் திருட்டு விசிடிகளை விற்ற துணிகரம் நடந்துள்ளது. மூட்டை மூட்டைகளாக திருட்டு விசிடிக்களைப் பறிமுதல் செய்த தங்கர் அவற்றை போலீஸில் ஒப்படைத்தார்.

இயக்குநர் தங்கர்பச்சான் கடலூர் சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பும் முன்பாக புதுச்சேரிக்குச் செல்ல முடிவு செய்தார். காரணம் புதுச்சேரியிலிருந்துதான் தமிழகத்திற்கும், நாட்டின் இதர பகுதிகளுக்கும் திருட்டு விசிடிகள் விநியோகம் அமோமாக நடந்து வருகிறது.

எனவே தனது ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தின் திருட்டு விசிடிக்கள் விற்பனை நடக்கிறதா என்பதை அறிய புதுச்சேரிக்கு விசிட் அடித்தார்.

குபேர் நகர் பகுதியில் கடை கடையாக சென்றார். அவரை இயக்குநர் என்று தெரியாத சிலர் சார், ஒன்பது ரூபாய் நோட்டு சிடி இருக்கிறது, வேண்டுமா என்று கேட்டுள்ளனர். அதிர்ந்து போன தங்கர், அந்தக் கடை முழுவதும் தீவிரமாக சோதனை போட்டார். அப்போது குவியல் குவியலாக ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் ஆகியவற்றின் திருட்டு விசிடிக்கள் சிக்கின.

மேலும் பல்வேறு புதுப் படங்களின் திருட்டு விசிடிக்களும் அங்கு இருந்தனன. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்து அவர்களிடம் விசிடிக்களை ஒப்படைத்தார் தங்கர்.

இதேபோல நகரின் வேறு சில பகுதிகளிலும் அதிரடியாக சென்று சோதனை போட்டு திருட்டு விசிடிக்களைப் பிடித்தார். சமீபத்தில் வெளியான பல தமிழ்த் திரைப்படங்களின் திருட்டு விசிடிக்கள் படு சகஜமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்த அவர், புதுச்சேரியிலிருந்துதான் இந்தியா முழுவதும் திருட்டு விசிடிக்கள் போகின்றன.

இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியை விரைவில் சந்தித்து புகார் கொடுக்க உள்ளேன் என்றார் தங்கர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil