»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார்த்திக் நடித்து தயார் நிலையில் இருக்கும் மூன்று படங்கள் சுமார் 1 வருட காலமாக பெட்டிக்குள்தூங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை.

இதையடுத்து படங்களின் விலையை தயாரிப்பாளர்கள் குறைத்துக் கொண்டே போக, காலம் தான்போய்க் கொண்டிருக்கிறதே ஒழிய படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் யாரும் வரவில்லை.

இந்தப் படங்கள் ஓடும், தமிழில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்து கார்த்திக்குடன் ஏகத்துக்கும்கவர்ச்சியாக நடித்த சாருலதா (இவர் தனது பெயரை இப்போதெல்லாம் ரக்ஷா என்று குறிப்பிடச்சொல்கிறார்), ஹரிப்பிரியா, தனுராய், கெளசல்யா ஆகியோர் கார்த்திக் பெயரைச் சொன்னாலேவெறுப்பு பார்வை வீசுகிறார்கள்.

இதில் சாருலதா ஏற்கனவே கன்னடத்தில் பல கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்தவர். தமிழில்ஹம்சவர்த்தனுடன் ஜூனியர்-சீனியர் படத்தில் படத்தில் நடித்தார், அது படு பிளாப்.

அடுத்ததாகஇதையடுத்து கார்த்திக்குடன் காஷ்மீர் என்ற படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது சாருலதாவுக்கு.


அருண்குமாருடன் முத்தமிடலாமா என்னொரு படம். அதுவும் படுதோல்வி அடைந்தது.அதில் கார்த்திக்குடன் மெளத் கிஸ் காட்சிகள், ரணகளமான மழை டான்ஸ் என கிளுகிளுவைசேர்த்தார்கள்.

கவர்ச்சி காட்டினால் தமிழில் ஒரு இடத்தைப் பிடித்துவிடலாம் என்று கார்த்திக்கும் உசுப்பிவிடஅவருடன் சேர்ந்த மிக தாராளமாய் நடித்தார் சாருலா என்ற ரக்ஷா.

ஆனால், படத்தை வாங்க தான்ஆள் இல்லை. இதனால் பெட்டியில் பெட்டிப் பாம்பாய் தூங்குகிறது காஷ்மீர்.

தயாரிப்பாளரோ பெரும் நம்பிக்கையுடன் வாரம் ஒரு கரம் மசாலா ஸ்டில்லை ரிலீஸ்செய்தவண்ணம் இருக்கிறார். படம் போணியாகவில்லை.

கார்த்திக்குடன் இன்று என்ற படத்தில் ஜோடி சேர்ந்தார் தனுராய். அவரையும் கோழி உரிப்பதுமாதிரி உரித்தார்கள். படம் வெளிவந்துவிட்டதாய் சொல்கிறார்கள்.

எந்தத் தியேட்டரில் என்றுதெரிந்து கொள்வதற்கு முன்பாகவே படத்தைத் தூக்கிவிட்டார்கள்.

கார்த்திக்கை நம்பி கவர்ச்சி அலையை தூக்கலாகவே வீசிய தனு ராய் வெறுத்துப் போய் மும்பைக்கேபோனார். இப்போது தன் தோல்விப் படத்தை கோடம்பாக்கம் மறந்திருக்கும் என்ற நம்பிக்கையில்மீண்டும் வந்திறங்கி சான்ஸ் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பார்ட்டி வைப்பதோடு தானும் சரிக்கு சமமாய் உட்கார்ந்து தம்அடித்து மகிழ்வித்து வருகிறார். இந்த பார்ட்டிகளின் பலனாக ஒரு பெயர் சூட்டப்படாத படத்தில்நடிக்கும் வாய்ப்பு கைக்கு சிக்கியிருக்கிறது.

இதே போல கார்த்திக்கை நம்பி ஏமாந்தவர் ஹரிப்பிரியா. ஐஸ் படத்தின் மூலம் தெலுங்கில் இருந்துதமிழுக்கு வந்தவர், அதில் லேசாக கவர்ச்சி காட்டிய இவரை என்றும் என்ற படத்தில் கார்த்திக்குடன்நடிக்க புக் செய்தார்கள். (பின்னர் படத்தின் பெயர் என்றும் உன்னை நேசிப்பேன் என்று மாறியது).அதில் ஹரிப்பிரியாவை கவர்ச்சியில் உண்டு, இல்லை என்றாக்கினார்கள்.

ஏகத்துக்கும் விட்டுக் கொடுத்து, நல்ல ஒத்துழைப்பும் தந்தார். அடுத்தடுத்த சான்ஸ் வரும் என்றுநினைத்தார். படமும் வெளியாகவில்லை. அடுத்து புக் ஆன சில வாய்ப்புக்களும் கை நழுவிவிட்டன.

அதே போல கெளசல்யாவுடன் கார்த்திக் ஜோடி சேர்ந்த படம் மனதில். இதில் காலம் போனகாலத்தில் கவுசல்யா ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டியும் வாங்க ஆள் இல்லை.

இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்த கெளசல்யாவை தமிழ், மலையாளம், தெலுங்கு மூன்றும் கைவிட்டதால்தனது சொந்த ஊரான பெங்களூரில் ரெஸ்ட் எடுத்தார்.

விளைவு ஆள் கொஞ்சம் ஊதிப் போனார். ஒரு ரவுண்ட் ஏறிவிட்ட உடம்பை எக்போஸ் செய்து நடித்தால் நிறையசான்ஸ் கிடைக்கும் என்று நம்பி கன்னடத்தில் இவர் கவர்ச்சி காட்ட, தமிழில் கார்த்திக்குடன் நடிக்க வாய்ப்புவந்தது. இதில் சேலையிலேயே கெளசல்யா கலக்கியிருக்கிறார்.

இந்த ஸ்டில்கள் வெளியாகி பரபரப்பை ஊட்டினாலும் மனதில் படத்தை வாங்கதான் ஆளில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil