twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நா.முத்துக்குமாருக்கு ஜி.வி.பிரகாஷ் மீது கோவம் வரும்போது இதைத்தான் செய்தாராம்

    |

    சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் சினிமா பாடல்கள் மட்டுமன்றி, சீரியல் டைட்டில் பாடல்கள், நாவல்கள், இரு படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் அத்துனை இசையமைப்பாளர்களுடனும் பணிபுரிந்துள்ள முத்துக்குமார் பெரும்பாலும் யுவனின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியும்.

    ஆனால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிற்கும் அதிக பாடல்களை எழுதியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

    இது அஜித்தோட கேஜிஎஃப்.. விஜய்க்கு நெய்வேலி.. திருச்சியில் AK.. மொட்டைமாடியில் கொல மாஸ்!இது அஜித்தோட கேஜிஎஃப்.. விஜய்க்கு நெய்வேலி.. திருச்சியில் AK.. மொட்டைமாடியில் கொல மாஸ்!

    துணை இயக்குநர்

    துணை இயக்குநர்

    கல்லூரி படிப்பை முடித்துவிட்டு முதலில் இயக்குநன் ஆக வேண்டும் என்ற கனவில் இயக்குநர் பாலு ம்கேந்திராவிடம் துணை இயக்குநராக இணைந்தார் முத்துக்குமார். அவரிடம் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு பின்னர் பாடல்கள் எழுதத் துவங்கினார். ஒருமுறை நிறைய இயக்குநர்கள் கூடி இருந்த சபையில் முத்துக்குமார் எழுதிய கவிதையை அவர்களுக்கு படித்துக் காட்டச் சொல்லியிருக்கிறார் பாலு மகேந்திரா. அதன் பின்னரே பாடலாசிரியர் ஆனார். அவர் பாடல் எழுதச் சென்றது ஆரம்பத்தில் பாலு மகேந்திராவுக்கு பிடிக்கவில்லையாம். பின்னர்தான் அதை நினைத்து பெருமைப்பட்டதாக கூறியுள்ளார்.

    பாடலாசிரியர்

    பாடலாசிரியர்

    ஒரு சில பாடல்கள் எழுதியிருந்தாலும், முதன் முதலில் அவரை அடையாளம் காட்டியது பிரசாந்த் நடித்திருந்த சலாம் குலாமு பாடல்தான். அதன் பின் தாவணியில் என்னை மயக்குறியே, தேரடி வீதியில், கொடுவா மீச அருவா பார்வ, திருநெல்வேலி அல்வாடா, 7ஜி ரெயின்போ காலனி பாடல்கள் என்று அவர் காட்டில் இசை மழைதான் பொழிந்தது. இறுதியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் சர்வம் தாள மயம் படத்தில் ஒரு பாடலி எழுதியிருந்தார்.

    வசனகர்த்தா

    வசனகர்த்தா

    பாடலாசிரியராக மட்டுமல்லாமல் கிரீடம் படம் மூலம் வசனகர்த்தாவாகவும் தனது பணியை சிறப்பாக செய்தார். அதைத் தவிர்த்து ஜெய்ப்பது நிஜம், என் தோழி என் காதலி என் மனைவி, வைதேகி உள்ளிட்ட சீரியல்களுக்கு டைட்டில் பாடல்களையும் எழுதியுள்ளார். பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமன் நகரம் மாநகரம் ஆகிய கவிதை தொகுப்புகளையும் இயற்றியுள்ளார்.

    ஜி.வி. பிரகாஷின் நினைவுகள்

    ஜி.வி. பிரகாஷின் நினைவுகள்

    இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிமுகமான வெயில் திரைப்படத்திலிருந்தே அவருக்காக பல பாடல்களை எழுதியுள்ளார். ஜி.வி 375 பாடல்களுக்கு இசையமைத்திருந்தபோது அதில் 250 பாடல்களை முத்துக்குமார்தான் எழுதியிருந்தாராம். இருவரும் பல முறை சண்டை போட்டுக் கொண்டதாகவும், பின்னர் இரவு ஃபோன் செய்து இரண்டு மணி நேரம் தனக்கு அட்வைஸ் செய்து ஓரு அண்ணன் போல் தன்னுடன் இருந்ததாகவும், முத்துக்குமார் இறந்த பின்னும் அவரது அலைபேசி எண்ணை அழிக்க மனமில்லாமல் இன்றும் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் ஜி.வி கூறியுள்ளார். முத்துக்குமார் கடைசியாக எழுதிய பாடலில் ஜி.வி.பிரகாஷ்தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    This is what Na Muthukumar did when he got angry with GV Prakash
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X