twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிஜிஎம் கிங் யுவன்.. இந்த ஆண்டு நெஞ்சம் மறப்பதில்லை, சுல்தான், மாநாடு, வலிமை.. மனுஷன் பக்கா மாஸ்!

    |

    சென்னை: சரத்குமாரின் அரவிந்தன் படத்தில் எப்படி ஆரம்பித்தாரோ அதே எனர்ஜியுடன் இன்னமும் இளைஞர்களை கவரும் இசையை கொடுத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

    இசைஞானி இளையராஜாவின் இசையே இன்னமும் இளமையாய் இருக்கும் நிலையில் அவரது மகன் பற்றி சொல்லவா வேண்டும்.

    இந்த ஆண்டு வெளியான நெஞ்சம் மறப்பதில்லை, சுல்தான், மாநாடு மற்றும் தற்போது வெளியாகி உள்ள வலிமை பிஜிஎம் என மனுஷன் வேற லெவலில் ரசிகர்களுக்காக கடும் உழைப்பை கொட்டி இருப்பது தெளிவாக தெரிகிறது.

    மெய் சிலிர்க்க வைக்கும் வலிமை விசில் தீம் மியூசிக்.. ஒவ்வொரு ஃபிரேமிலும் அஜித் இன்னாம்மா இருக்காரு!மெய் சிலிர்க்க வைக்கும் வலிமை விசில் தீம் மியூசிக்.. ஒவ்வொரு ஃபிரேமிலும் அஜித் இன்னாம்மா இருக்காரு!

    பிஜிஎம் கிங்

    பிஜிஎம் கிங்

    காதல் பாடல்கள் என்றாலே யுவன் சங்கர் ராஜாவை அடிச்சிக்க முடியாது என்கிற நிலை இன்றளவும் எப்படி இருக்கிறதோ அதே போலவே பிஜிஎம் போடுவதில் கிங்காகவே கோலோச்சி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. அதிலும், இந்த ஆண்டு அவர் பிஜிஎம் ஒவ்வொரு படத்துக்கும் வெரைட்டியாகவும் வெறித்தனமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தினக்கு தினக்கு தீன தீனா

    தினக்கு தினக்கு தீன தீனா

    இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2000ம் ஆண்டு வெளியான தீனா படம் தான் யுவன் சங்கர் ராஜா மற்றும் அஜித் காம்போவில் வெளியான முதல் படம். அந்த படத்தில் இடம்பெற்ற வத்திக்குச்சி பத்திக்காதுடா, சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் என எல்லா பாடல்களும் பயங்கர ஹிட் ஆனது. தினக்கு தினக்கு தீன தீனா என யுவன் போட்ட மாஸ் பிஜிஎம் அஜித் ரசிகர்களை திரையரங்குகளில் கொண்டாட வைத்தது.

    அஜித் யுவன் காம்போ

    அஜித் யுவன் காம்போ

    தீனாவுக்கு பிறகு பில்லா படத்தில் மீண்டும் அஜித் யுவன் காம்போ அரங்கேறியது. அந்த படத்தின் பிஜிஎம் பற்றி அத்தனை அஜித் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஹீரோ எலிவேஷனுக்கு பிஜிஎம் எந்தளவுக்கு முக்கியம் என்பதை பில்லா சிறப்பாக எடுத்துரைத்திருக்கும். ஏகன், மங்காத்தா, பில்லா 2, நேர்கொண்ட பார்வை என ஒவ்வொரு முறையும் அஜித் யுவன் காம்போ வந்தாலே ரசிகர்களுக்கு பிஜிஎம் ட்ரீட் தான்.

    நெஞ்சம் மறப்பதில்லை

    நெஞ்சம் மறப்பதில்லை

    இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே. சூர்யாவை காட்டும் போதெல்லாம் ஸ்பெஷல் பிஜிஎம் போட்டு தெறிக்க விட்டு இருப்பார். என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடலும், கண்ணுங்களா செல்லங்களா என வெரைட்டி காட்டியிருப்பார் யுவன்.

    சுல்தான் பிஜிஎம் மட்டும்

    சுல்தான் பிஜிஎம் மட்டும்

    கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் விவேக் மெர்வின் பாடல்களுக்கு இசையமைத்த நிலையில், சுல்தான் படத்தின் பிஜிஎம் மட்டும் பிஜிஎம் கிங் யுவன் சங்கர் ராஜா போட்டுக் கொடுத்திருந்தார். 2021ம் ஆண்டு யுவனின் எனர்ஜி பல மடங்காக பெருகியதை ரசிகர்கள் கண்டு வியந்தனர்.

    மிரட்டிய மாநாடு

    மிரட்டிய மாநாடு

    நடிகர் அஜித் குமாரின் மங்காத்தா படத்திற்கே போடாத அளவுக்கு சிம்புவின் மாநாடு படத்திற்காக மூன்று விதமான பிஜிஎம்களை யுவன் சங்கர் ராஜா போட்டு மிரட்டி இருந்தார். ஹீரோவுக்கு ஒரு பிஜிஎம் வில்லன் எஸ்.ஜே. சூர்யாவுக்கு தனி பிஜிஎம் என பக்கா மாஸ் காட்டியிருந்தார்.

    Recommended Video

    Yuvan Shankar Raja speech in Maanadu Pre-release, Mahat, Y.G.Mahendran
    வலிமை விசில் பிஜிஎம்

    வலிமை விசில் பிஜிஎம்

    மாநாடு படத்தோடு யுவன் ட்ரீட் இந்த ஆண்டு ஓவர் ஆகிறது. அடுத்த ஆண்டு தான் வலிமை படத்தில் யுவன் எப்படி பிஜிஎம் போட்டுள்ளார் என்பதை பார்க்க வேண்டும் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக வலிமை படத்திற்கு யுவன் போட்டுள்ள வித்தியாசமான விசில் பிஜிஎம் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. இன்னும் வலிமை படத்தில் என்னவெல்லாம் மாய வித்தைகளை யுவன் செய்திருக்கிறார் என்பதை படத்தை பார்த்து அனுபவிக்கலாம்.

    English summary
    This year Yuvan Shankar Raja proved he is a true BGM King. He scores a mass Bgm for Nenjam Marappathilai, Sulthan, Maanaadu and now Valimai makes Yuvan fans happy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X