»   »  கையைப் புடிடா, காலைப் புடிடா ..

கையைப் புடிடா, காலைப் புடிடா ..

Subscribe to Oneindia Tamil

திருத்தம் படத்தில் ஹரிக்குமாரும், மான்ஸியும் நடித்த முதலிரவுக் காட்சியை படு கிளுகிளுப்பாக படமாக்கியிருக்கிறாராம் இயக்குநர் பொன்ராமன்.

தூத்துக்குடி படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்த ஹரிக்குமார் சாப்ட்வேர் என்ஜீனியராக நடிக்கும் படம் திருத்தம்.

முதல் படத்தில் அரிவாள் எடுத்த ஹரிக்குமார் இந்தப் படத்தில் கம்ப்யூட்டர் மவுசும், கலக்கல் லவ்ஸுமாக அதகளம் பண்ணுகிறாராம்.

ஹரிக்குமாருக்கு இப்படத்தில் இரண்டு ஜோடிகள். ஒருவர் வெயில் நாயகி பிரியங்கா. இன்னொருவர் சண்டிகர் தந்த மான்ஸி.

பிரியங்கா கண்ணியக் காதலுக்கு என்றால், மான்ஸியோ கலக்கல் கிளாமரில் ரணகளம் செய்கிறாராம்.

சமீபத்தில் இப்படத்துக்காக ஒரு கிளுகிளுப்பான காட்சியை படமாக்கியுள்ளனர். அதாவது ஹரிக்குமாருக்கும், மான்ஸிக்கும் முதலிரவு.

உள்ளே வரும் ஹரிக்குமார், எனக்கு ஒண்ணுமே தெரியாதே என்று அப்பாவித்தனமாக கூறுகிறார். அதற்கோ மான்ஸி, அதெல்லாம் நான் சொல்லித் தர்றேன் என்று கூறி பக்குவகமாக எடுத்துக் கூறுகிறாராம்.

அங்கே தொடங்குகிறது அட்டகாசமான காதல் பாட்டு. முதலிரவுக் காட்சியாயிற்றே! சைவப் பாட்டாக கொடுக்க முடியுமா? அதனால் படு கிளாமரான பாட்டைப் போட்டு ரசிகர்களின் நாடி நரம்பை சுண்ட வைத்துள்ளனராம்.

படவா, கையைப் புடிடா, காலைப் புடிடா என்று ஆரம்பிக்கிறது அந்தப் பாடலின் முதல் வரி. அப்புறம் எப்படியெல்லாம் போகிறது என்பதை விவரித்தால் ரசிகர்களுக்கு இருப்புக் கொள்ளாது என்பதால் முதல் வரியோடு ஃபுல் ஸ்டாப்.

இந்தப் பாடலில் நடிக்கும் முன்பே கிளாமர் தூக்கலாக இருக்க வேண்டும் என்று மான்ஸியிடம் சொல்லி விட்டார்களாம். அவரும் பச்சைக் கொடி காட்டி விடவே, படு அமர்க்களமாக வந்துள்ளதாம் பாடல்.

மான்ஸி மட்டும் கவர்ச்சி காட்டினால் பிரியங்காவுக்கு பொறுக்காதே, அவரும் தன் பங்குக்கு லேசு பாசாக கிளாமரில் புகுந்து விளையாடியுள்ளாராம்.

அப்ப, அழுத்தம் திருத்தமான கிளாமர் கதை இந்த திருத்தம் என்று சொல்லலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil