»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தேவயானியை இயக்கவுள்ளார் பாலு மகேந்திரா. ரொம்ப நாளாக அமைதியாக இருந்து வரும் மகேந்திரா, மீண்டும்தனது கேமராவை களம் இறக்குகிறார்.

கடைசியாக அவர் இயக்கிய ராமன் அப்துல்லா பரபரப்பை ஏற்படுத்தியதை யாரும் அவ்வளவு எளிதில்மறந்திருக்க முடியாது. இந்தப் படத்தில் தான் திரையுலகில் தொழிலாளர் பிரச்சனை உருவானது. தொடர்ஸ்டிரைக்குகள், உண்ணாவிரதங்கள் என திரையுலகமே அல்லோகலப்பட்டது.

இப்போது மீண்டும் களம் இறங்குகிறார் பாலு மகேந்திரா. ஆனால் தமிழில் அல்ல. இந்திக்குப் போகிறார்.ஹீரோயினாக தேவயானியை முடிவு செய்துள்ளாராம். ஹோம்லி முகமாக வேண்டும் என்பதால் தேவயானியைஅவர் தேர்ந்தெடுத்துள்ளாராம்.

இசை யார்? இளையராஜாவா மகேந்திரா?

தமிழ் அசோகாவில் ஆஷிஷ்:

டிவி மூலம் பிரபலமாகி இந்தித் திரையுலகில் புகுந்த ஆஷிஷ் வித்யார்த்தி, ஒரு இயல்பான நடிகர். இந்தியில் பலபடங்களில் நடித்துள்ள அவர் தமிழிலும் கால் பதித்தார் தில் படம் மூலம்.

முதல் படத்திலேயே ஆக்ரோஷமான வில்லனாக வந்து கலக்கிய ஆஷிஷ் தற்போது இரண்டாவது தமிழ் படத்தில்நடிக்கவுள்ளார்.

அன்பாலயா பிரபாகரன் தயாரிக்கும் அசோகா படத்தில் அசத்தலான வேடமாம் வித்யார்த்திக்கு. "தில்"லில்வித்யார்த்தியின் நடிப்பைப் பார்த்து அசந்துபோன பிரபாகரன் உடனடியாக அவரை தனது "அசோகா"விற்கு புக்செய்து விட்டாராம்.

பின்னுங்க ஆஷிஷ் !

ஆஸ்கரின் அடுத்த படம்:

"பூவெல்லாம் உன் வாசம்" நன்றாக போனதால் அந்த உற்சாகத்தில் அடுத்த படத்திற்கான வேலையைத்தொடங்கியுள்ளது ஆஸ்கர் பிலிம்ஸ்.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் முதல் படமான "துள்ளாத மனம் துள்ளும்" சூப்பர் டூப்பர் ஹிட் படமானது. அதைஇயக்கிய எழில்தான் "பூவெல்லாம் உன் வாசம்" படத்தையும் இயக்கியுள்ளார். அருமையான கதை, அழகானபாடல்கள், பிரமாண்டமான காட்சியமைப்புகள் என படம் நன்றாக ஓடியது.

எனவே அடுத்த படத்திற்கான வேலையையும் அவர்கள் தொடங்கி விட்டார்கள். தீனா படத்தை இயக்கியமுருகதாஸ் தான் இயக்கிகிறார்.

விஜயகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் மாதவனும் உண்டு. இவர்களுக்கு ஜோடியாக சிம்ரனும்,ஜோதிகாவும் வருகிறார்கள்.

ஓரிலக்க இயக்குநர்...

விஜயகாந்த்தை வைத்து "பரதன்" என்ற படத்தை இயக்கிய சுபாஷுக்கு இப்போது கையில் படங்களே இல்லை.

அவரிடம் இருப்பது "லவ் மேரேஜ்" என்ற ஒரே படம்தான். அந்தப் படத்திற்காக அவர் வாங்கியிருக்கும் சம்பளம்இரண்டு இலக்கத்தைக் கூட தாண்டவில்லையாம். அதாவது ரூ.9 லட்சம்தானாம்.

அடப் பாவமே !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil