twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பெஷல்ஸ்

    By Staff
    |

    கண்ணுபடப் போகுதய்யா, வானத்தைப் போல, வல்லரசு என்று வரிசையாக மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

    நடிகர் சங்கத்தின் மேல் பல கோடிகள் கடன், ராதாரவியை விட்டால் வேறு நபர் தலைவராக முடியாது என்ற நிலையில் போட்டியின்றி தலைவராக தேர்வுபெற்று, சினிமா உலகில் ஒரு தனி முத்திரை பதித்துள்ளார்.

    சினிமாவில் புரட்சிக் கலைஞராக ஜொலிக்கும் விஜய்காந்த் பற்றி இல்லாமல், விஜயகாந்த் என்ற தனி மனிதரின் குடும்ப வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், இயல்புகள் அடங்கிய அவரது மறுபக்கம் பற்றிய சுவையான தகவல்கள் தான் இவை:

    விஜயகாந்த் அப்பா அழகர்சாமி. அம்மா ஆண்டாள். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். மூன்றாவது மகன் விஜயராஜா (இன்றைய விஜயகாந்த்). ஒருஅண்ணன், ஒரு அக்கா, ஒரு தங்கை ஆகியோர் விஜயகாந்தின் உடன்பிறப்புகள்.

    விஜயகாந்துக்கு இரண்டு வயது இருக்கும்போது தாயார் இறந்து விட்டார். சிறுவயதில் தாயை இழந்த சோகம் அவர் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இன்றும் கூட தாயை பற்றி அவர் பேசும்போது இமைகளின் ஓரத்தில் ஈரம் கசியும். அதனால் தான் தன் வீட்டிற்கு "ஆண்டாள் அழகர்என்று பெயர் சூட்டியுள்ளார்.

    பள்ளிப் பருவத்தில் நண்பர் பட்டாளத்துடன் கும்மாளம் போட்டதால், படிப்பில் ஆர்வம் மறைந்தது. அப்பா பிடிவாதத்தால் சொந்த ஊர் மதுரையை விட்டு,தேவகோட்டை, விக்ரசிங்கபுரம் என்று பல ஊர்களில் படிப்பை தொடர்ந்தார்.

    பள்ளிப் பருவத்திலேயே பணக்காரப் பையன்களுடன் பழகுவதை விட ஏழை குடும்பத்துப் பிள்ளைகளிடம் தான் நட்பு கொள்வதை விரும்பினார். இன்றுஎல்லோருடனும் பேதம் பாராமல் பழுகுவதற்கு அதுவே காரணம் என்பது விஜய்காந்தின் கருத்து.

    சின்ன வயதில் எம்ஜிஆர் ரசிகர். அவரது படங்களை விடாமல் பார்ப்பார். நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக சினிமா ஆசையில் சென்னை வந்தார்.

    ஒரு படத்திலாவது தலையை காட்டி விட்டு ஊருக்குத் திரும்பி விடலாம் என்று நினைத்திருந்த அவரை, உதாசீனங்கள், அவமானங்கள் அதிர்ச்சி அடையச்செய்தன. சினிமாவில் சாதித்து விட்டு தான் போவது என்ற வைராக்கியம் ஏற்பட்டது.

    விஜய்காந்தின் தந்தைக்கு அரிசி ஆலை, விவசாயம் என்று பல தொழில்கள். நல்ல வசதியான குடும்பம். இவரை கண்டால் எல்லோரும் "சின்ன முதலாளிஎன்றே அழைப்பார்கள்.

    மனித மனங்களின் மாற்றங்களை அங்கு தான் புரிந்து கொண்டேன். இன்று ஒருவரை பார்த்தவுடன் அவரை எடை போடும் ஆற்றலை அங்கே தான் கற்றுகொண்டேன் என்று சொல்கிறார் விஜய்காந்த்.

    இவரது சின்ன வயது தோழன் தான் இப்ராகிம் ராவுத்தர். இப்போதும் உயிர்த் தோழனாக நீடிக்கிறார். அடிக்கடி சண்டை போடுவதும் அவரோடு தான்.

    இன்னும் பல நல்ல நண்பர்களுக்கு விஜய்காந்துக்கு உண்டு. ஆனாலும் இப்ராகிம் மீது தனிப்பாசம். ஒரு முறை படப்பிடிப்பில் துப்பாக்கி காயம் அடைந்துமயக்க நிலையில் மருத்துவமனையில் இருந்தார் விஜய்காந்த்.

    ஓடோடிச் சென்ற ராவுத்தர், கண் கலங்கியபடி விஜயகாந்த் அருகில் சென்றார். அவரோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். என்ன தெரியுமா? இப்ராகிம்வந்து விட்டானா என்று அந்த மயக்கத்திலும் விஜயகாந்த முணுமுணுத்ததை கேட்டு துடித்துப் போய் விட்டாராம் ராவுத்தர்.

    எப்போதும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து விடுவார். மொட்டை மாடியில் உடற்பயிற்சி. குளித்து முடித்ததும் பூஜை அறைக்குள் புகுந்து விடுவார்.

    பூஜை அறையில் சர்வமதக் கடவுள்களும் இருக்கிறார்கள். நாள்தோறும் வழிபாடு. பின்னர் தினசரிபத்திரிகைகளில் மூழ்கி விடுவார். நாட்டு நடப்புகளில்அவ்வளவு ஆர்வம்.

    அதன் பின்னர் தான் காலை உணவு. இட்லி அல்லது தோசை இரண்டு. இல்லாவிட்டால் பிரட் டோஸ்ட். பகல் உணவு மட்டும் அசைவம். சிக்கன், மீன்வகைகளை விரும்பி உண்பார்.

    சென்னையில் படப்பிடிப்பு என்றால் வீட்டில் இருந்து தான் உணவு வரும். கேரட், முட்டைகோஸ், கீரை போன்ற காய்கறி வகைகள் அவரது மெனுவில்கட்டாயம்.

    இரவில் சப்பாத்தி அல்லது தோசை. வெயில் காலங்களில் இவரது ஸ்பெஷல் மெனு கேழ்வரகுக் கூழில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு ஒரு வில்லேஜ்ஐட்டம் வீட்டில் ரெடியாக இருக்கும். வைத்த வாயை எடுக்காமல் கப்பென்று அடித்து விடுவாராம். படப்பிடிப்பு இடைவேளையில் மோர், இளநீர், காபி, டீஎன்று எதுவானாலும் மறுக்கமாட்டார்.

    வீட்டில் மனைவி கையால் தான் சாப்பாடு. சாப்பிடும்போது பேச மாட்டார். சாப்பிட்டு முடித்ததும் "குழம்பு சுமார் என்றால், நல்லாவே இல்லைஎன்று அர்த்தமாம். அவரது மனைவிக்கு மட்டும் தெரிந்த ரகசியம் இது.

    மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக சொல்லி விடுவார். அக்கம்பக்கம் பார்த்து பேசுவதெல்லாம் இவருக்கு தெரியாது. படுக்கப் போவதற்கு முன்புஇரண்டு ஆங்கிலப் படங்களாவது பார்த்து முடித்து விடுவார். அதுவும் அதிரடி ஆக்ஷன் படங்களை தான் பார்ப்பார்.

    வீட்டிற்கு வரும் ரசிகர்களை வெறும் வயிற்றோடு அனுப்ப மாட்டார். "சாப்பிட்டுட்டு போங்க என்று சொல்லக் கூடிய ஒரே நடிகர் இவர் தான். வீட்டில்என்ன உணவு இருக்கிறதோ அவற்றை ரசிகர்களுக்கும் பரிமாறி அனுப்புவாராம் அவரது மனைவி.

    சென்னை சாலிகிராமத்தில் கண்ணபிரான் காலனியில் உள்ள இவரது வீடு மிகவும் எளியாைனது. போதுமான வசதிகள் இருந்தாலும் இவரது தகுதிக்குஇன்னும் பெரிய வீட்டில் இருக்கலாமே என்ற ஆதங்கம் இவரது திருமதிக்கு இப்போதும் இருக்கிறது.

    சென்னைக்கு வந்த புதிதில் இருவரை சந்திக்க ரொம்பவும் விரும்பினார் விஜயகாந்த். ஒருவர் கலைஞர். இன்னொருவர் எம்.ஜி.ஆர். அவரை நேரில் சந்திக்கவாய்ப்பே கிடைக்கவில்லை என்ற வருத்தம் விஜய்காந்துக்கு எப்போதும் உண்டு.

    ஆனால், இவர் நடித்த இரண்டு படங்களை (உழவர் மகன், சட்டம் ஒரு விளையாட்டு) விடியோவில் பார்த்துள்ளாராம். தகவல் ஜானகி எம்ஜிஆர்.

    கேப்டன் பிரபாகரன் படத்தை பார்த்த கலைஞர், என் ஐம்பதாண்டு கலை வாழ்வில் ஒரு முழுமையான படத்தை பார்த்தேன் என்று பாராட்டினாராம்.

    சின்னக் கவுண்டர் படத்தைப் பார்த்த மூப்பனார், படத்தில் பல இடங்களில் தலைவர் காமராஜரைப் பார்த்தேன் என்று பாராட்டினாராம். இந்த இரண்டுபாராட்டுகளையும் மறக்க முடியாதவை என்கிறார் விஜய்காந்த்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X