»   »  சிவாஜிக்கு முஸ்லீம் அமைப்பு எதிர்ப்பு!

சிவாஜிக்கு முஸ்லீம் அமைப்பு எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தில் கருப்புப் பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலையில் முஸ்லீம்கள் ஈடுபடுவது போன்ற காட்சிக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிவாஜியில், கருப்புப் பண முதலைகளிடமிருந்து அபகரித்த கருப்புப் பணத்தை அமெரிக்க டாலர்களாக மாற்றுகிறார் ரஜினி. இதற்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த சிலர் உதவுவது போன்ற காட்சி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது ரபீக் கூறுகையில், ரஜினிகாந்த்துக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது படத்தை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

இப்படிப்பட்டவரின் படத்தில் முஸ்லீம்களை இதுபோல மோசமாக சித்தரிக்கும் காட்சியை வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

தமிழ் சினிமாவில் தீவிரவாதிகள் என்றாலே முஸ்லீம்கள்தான் என்பது போல காட்டும் வழக்கம் உள்ளது. ஏதோ ஓரிரு இடங்களில் சில முஸ்லீம்கள் தவறு செய்திருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தீவிரவாதிகள் என்பது போல காட்டக் கூடாது.

சிவாஜி படத்தில் கருப்புப் பணத்தை மாற்றும் ஏஜென்டாக முஸ்லீம் ஒருவரைக் காட்டியுள்ளனர். இக்காட்சியைப் பார்ப்பவர்கள் மனதில் முஸ்லீம்கள்தான் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற எண்ணம் வரலாம்.

ஷங்கர்தான் இந்தக் காட்சி இடம் பெற முக்கியக் காரணம். ஆரம்பத்திலிருந்தே இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருபவர் ஷங்கர். இந்தக் காட்சிக்கு நாங்கள் எங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

கருப்புப் பணக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக சார்பில் சிவாஜி திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றனவாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil