»   »  மூன்றெழுத்தில் இவர் மூச்சிருக்கும்.. அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்!

மூன்றெழுத்தில் இவர் மூச்சிருக்கும்.. அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காலம் மாறி போனாலும்.. தலைமுறை மாறிபோனாலும், இன்றும் நம் மனதிற்கும், காதுகளுக்கும் இதமாக காற்றோடு பாயும் இசையென்றால் அது கண்டிப்பாக பழைய பாடல்கள் தான். இதை மறுக்க யாராலும் முடியாது. காலங்கள் பல கடந்தும் இன்றும் இசைப்புயல், இசைஞானி-க்கு இணையாக மறைந்த ஒருவர் புகழ் இன்றும் திரையுலகினையும், பாடல்களிலும் அனைவரையும் கட்டிபோட்டிருக்கின்றது என்றால், அது கண்டிப்பாக தொகுலுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்தராஜன் பாடல்கள் தான். தெரிகிறதா இவர் யாரென்று..? ஆம், மறைந்த புகழ்மிக்க பாடகர் டி எம் சௌந்தராஜன் தான்.. இன்று அவரது 94-வது பிறந்தநாளன்று அவரை பற்றிய நினைவுகளை சற்று பகிர்ந்து கொள்ளலாம்.

Today The Legend TMS's 94th Birthday

பிரபல வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று, பல இடங்களில் கச்சேரி செய்து வந்தார். இவரின் கச்சேரியை பார்த்த சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தன்னுடைய கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் 1950-ஆண்டு இவரை திரையுலகில் பாடல் பாட வைத்தார். அதன் பின்னரே தொடர்ந்து பல படங்களில் நடிக்க இவரை ஒப்பந்தம் செய்தனர்.

இவரை பற்றி புதிதாக சொல்லவும் ஏதும் இல்லை, இவருக்கு அறிமுகமும் தேவையில்லை. அந்த அளவிற்கு புகழ் வாய்ந்தவர். இவர் நடிகர் திலகம் சிவாஜி, எம் ஜி ஆர், காதல் மன்னன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன், நகைச்சுவை புகழ் நாகேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கும் அவர்களது படத்திற்கும் பாடல்கள் பாடியுள்ளார். இவரின் சிறப்பே இவர் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமாக தனி தனி குரலில் அந்தந்த நடிகர்களுக்கு ஏற்றவாறு பாடல்கள் பாடி தனது குரல் மூலம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு தனி இடத்தினை பெற்றுள்ளார்.

இவர் சாதாரணமாக ஒரே தோரணையில் மட்டும் பாடவில்லை, இவரது குரலில் நாம் காதல், வீரம், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி, மகிழ்ச்சி, கிராமப்புற கிராமிய பாடல்கள் என பலவற்றை காணலாம். இவர் தனது வாழ்நாளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், 2500-க்கு மேற்பட்ட பக்தி பாடல்களையும் இவர் பாடியுள்ளார். இன்றும் ஏதேனும் கோவில் திருவிழாவிற்கு சென்றால் நீங்கள் கேட்பது இவர் பாடிய பாடல்களாகவே இருக்கும்.

இவர் பழம்பெரும் நடிகர்களுக்காக மட்டும் பாடவில்லை, இன்றும் நம்மிடையே இருக்கும் பிரபலங்களாகிய ரஜினி காந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கும் பாடல்கள் பாடியுள்ளார். 1995-ம் ஆண்டு வரை தொடர்ந்து பாடல்கள் பாடிய இவர் 2010-ம் ஆண்டு செம்மொழியான தமிழ்மொழி பாடலை பாடினார். இதுவே இவர் தனது வாழ்நாளில் பாடிய இறுதி பாடல் ஆகும்.

இவர பாடிய பக்தி பாடல்களில் "முத்தைத் திருபத்தித் திருநகை" பாடல் மிகவும் பிரபலமானவை. இவர் பி சுசீலா, எள் ஆர் ஈஸ்வரி, வாணி ஜெயராம், எஸ் ஜானகி, சீர்காழி கோவிந்தராஜன், கே ஜே யேசுதாஸ், பி பாலசுப்ரமணியம், விஸ்வநாதன், ராமமூர்த்தி, மலேசியா வாசுதேவன் மற்றும் பல்வேறு முன்னணி மற்றும் முக்கிய பின்னணி பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார். இவர் பி சுசீலா-வுடன் பாடிய டூயட் பாடல்கள் மட்டும் 727 ஆகும். ஆவளவும் அவ்வளவு அருமை.

இவர் விரல் விட்டு அல்ல,எண்ணுவதற்கு விரல்களே பத்தாத அளவிற்கு விருதுகளையும், பட்டங்களையும் வாங்கி குவித்துள்ளார். இவரது பெரும்பான்மையான பாடல்கள் கண்ணதாசனின் வரிகளே ஆகும். இப்பொழுது தான் தெரிகின்றது. கண்ணதாசன் பாடினாலே அவ்வளவு இதமாக இருக்கும் இதில், கண்ணதாசன் வரிகள், டி எம் எஸ் குரல் என்றால்...! வர்ணிக்க வார்த்தைகள் இல்லை, விமர்சிக்க அனுபவம் இல்லை.. பாடல்களை கேட்கும் போதே அப்பப்பப்பா மெய்சிலிர்கிறது.

இவர் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் எஸ் எஸ் வெங்கட்ராமன் முதல், கே வி மாகாதேவன், கானகுடி வைத்தியநாதன், எம் எஸ் விஸ்வநாதன், டி கே ராமமூர்த்தி, விஜயபாஸ்கர், இளையராஜா மற்றும் இசைப்புயல் ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் வரை பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

பிரபல கர்நாடக பாடல் புகழ் எம் கே தியாகராஜா பாகவதார் உடன் பணியாற்றிய பெருமை நம் டி எம் எஸ் -க்கு உண்டு. இவரின் புகழ் மற்றும் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். இவரின் பாடல்கள் மற்றும் இவரின் நினைவுகள் இன்றும் நம்மில் மறையாமல் இருக்க பல்வேறு சாட்சிகள் உள்ளன. அதற்கு எடுத்துக்காட்டுகள் வேண்டுமா? அதற்கு அவரின் பல பாடல்கள் இன்றும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் உதடுகள் முனுமுனுப்பதே. அவர் மறந்தாலும் அவரது பாடல்கள் மறையாது என்பதற்கு சாட்சி.

இப்பேற்பட்ட ஒரு புகழ்வாய்ந்த தலைசிறந்த ஒரு மாமனிதரை பற்றி அவரது 94-வது பிறந்தநாளில், அவரை பற்றிய செய்திகளை மிகச்சிறு துரும்பு அளவிற்கே நாம் பகிர்ந்துள்ளோம் என்பதை மீறி அவரை பற்றி பகிர நமக்கும் வாய்ப்பு கிடைத்ததை என்பதே பல விருதுகள் வாங்கியதற்கு சமம்.

English summary
Today The Famous Legend T M Soundarajan's 94th Birthday. He Was sung songs more than 1o,ooo movies songs, 2500 spritual songs. He Sung with P Suseela more than 727 duet songs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil