twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் படத்தில் இப்படிப்பட்ட பெண் கதாபாத்திரங்களா? மிரள வைக்கப் போகும் டாப் 5 யாரு?

    |

    சென்னை: ராஜ ராஜ சோழன் எனும் அரசனின் வாழ்க்கை வரலாறு கதையாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் முக்கிய கதாபாத்திரங்களே 35க்கும் மேற்பட்டு உள்ளன.

    நட்சத்திர பட்டாளத்தையே ஒன்று திரட்டி ஒரு படத்தை எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால், இயக்குநர் மணிரத்னம் அதனை சாதித்துக் காட்டி உள்ளார்.

    பொன்னியின் செல்வனின் ஆண் கதாபாத்திரங்களுக்கு இணையாக வலிமையான பெண் கதாபாத்திரங்களும் உள்ளன. அதில், முக்கியமான டாப் 5 கதாபாத்திரங்கள் பற்றியும், அந்த கதாபாத்திரங்களில் எந்த நடிகை நடித்துள்ளார் என்பது பற்றியும் இங்கே விரிவாக பார்ப்போம்..

    அடேங்கப்பா..பொன்னியின் செல்வன் படத்தில் யார்? யாருக்கு? எவ்வளவு சம்பளம் தெரியுமா?அடேங்கப்பா..பொன்னியின் செல்வன் படத்தில் யார்? யாருக்கு? எவ்வளவு சம்பளம் தெரியுமா?

    வானதி - சோபிதா துலிபாலா

    வானதி - சோபிதா துலிபாலா

    தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை சோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர காத்திருக்கிறார். இந்த படத்தில் வானதி கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். தோழியாக வரும் வானதியை பொன்னியின் செல்வனுக்கு மணமுடித்து வைக்க குந்தவை திட்டமிடுவார். ராட்சச மாமனே பாடலில் கார்த்தி கம்சனாக வேடமிட்டு நடனமாட, கிருஷ்ணனாக சோபிதா துலிபாலா தியேட்டரை தெறிக்க விடப் போகிறார்.

    பூங்குழலி - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

    பூங்குழலி - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

    பொன்னியின் செல்வன் கதையில் அருள் மொழி வர்மன், வந்தியத்தேவன் ஆகியோரை படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்பவர் சமுத்திரகுமாரி பூங்குழலி. அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி கவர்ச்சி பொங்க நடித்துள்ளார். பொன்னியின் செல்வனின் காதலியும் இவர் தான் என்பது கூடுதல் சிறப்பு.

    நந்தினி - ஐஸ்வர்யா ராய்

    நந்தினி - ஐஸ்வர்யா ராய்

    ஆதித்த கரிகாலனை கொன்று பழி தீர்க்கவும் சோழர் குலத்தையே வேறோடு சாய்க்கவும் வஞ்சத்துடன் வயதான பெரிய பழுவேட்டரையருக்கு மனைவியாக மாறி தஞ்சை மாநாகருக்குள் நுழையும் நந்தினி அழகின் மொத்த உருவம் என கல்கி வர்ணித்து இருப்பார். அவர் பார்வையில் விழுந்த யாருமே தப்ப முடியாது என்றும் குறிப்பிட்டு இருப்பார். பொன்னியின் செல்வன் படத்திலேயே வில்லி கதாபாத்திரமான நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். அவரது ஸ்க்ரீன் பிரசென்ஸ் எல்லாம் நிச்சயம் திரை தீப்பிடிக்கும்!

    குந்தவை - த்ரிஷா

    குந்தவை - த்ரிஷா

    அப்படிப்பட்ட நந்தினியின் ஒவ்வொரு நகர்வுகளையும் கவனித்து அவரது செக் வைக்க ஆதித்த கரிகாலனையும் பொன்னியின் செல்வனையும் தஞ்சைக்கு அழைத்து வர வந்தியத்தேவன் மூலம் காய் நகர்த்தும் வேலையை செய்யும் கதாபாத்திரமான குந்தவை தேவியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். ஆதித்த கரிகாலன் மற்றும் பொன்னியின் செல்வனின் சகோதரி ஆவார் இவர்.

    மந்தாகினி - ஐஸ்வர்யா ராய்

    மந்தாகினி - ஐஸ்வர்யா ராய்

    சுந்தர சோழரின் முதல் மனைவி ஊமைப் பெண் மந்தாகினி கதாபாத்திரத்திலும் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் நடித்துள்ளார். ஆடி பெருக்கு விழாவில் காவிரி ஆற்றில் படகில் செல்லும் போது தண்ணீரில் தவறி விழும் அருள்மொழி வர்மனை பொன்னி நதி போல தூக்கி காப்பாற்றுவது முதல் எப்போது அருள்மொழிக்கு ஆபத்து வந்தாலும், அவனுக்கு நிழலாக நின்று காக்கும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் யானை மீதெல்லம் ஏறி சவாரி செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கூஸ்பம்ப்ஸ் அடைய விடப் போகிறார் என்பது கன்ஃபார்ம்.

    English summary
    Top 5 Powerful female characters in Ponniyin Selvan are Nandini, Kundhavai, Poonguzhali, Vanathi and Mandhagini will makes more awful scenes for their fans. Aishwarya Rai, Trisha, Aishwarya Lekshmi and Sobhita Dhulipala played the roles respectively.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X