Don't Miss!
- Finance
2 நாளில் ரூ.18,000 கோடியை இழந்த LIC.. எல்லாம் அதானி குழுமத்தால் வந்த பிரச்சனை!
- News
சட்டைல தேசியக்கொடியைக் குத்திட்டு வரச் சொன்னா.. நீங்க என்ன ‘கொடி’ படத்தை குத்திட்டு வந்திருக்கீங்க
- Lifestyle
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சொல்லுங்க மாமாக்குட்டி.. இந்த ஆண்டு மக்களிடையே அதிகம் டிரெண்டான டாப் 5 வசனங்கள் இதோ!
சென்னை: கதம் கதம் என பாபா முத்திரையை காட்டி ரஜினிகாந்த் சொல்லும் பஞ்ச் வசனங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேசிக் கொண்டிருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.
ரஜினிகாந்தே இப்போதெல்லாம் படங்களில் பஞ்ச் வசனத்தை குறைத்து விட்டார். பீஸ்ட் படத்தில் விஜய்யும் "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா.. என் பேச்சை நானே கேட்க மாட்டேன்" என போக்கிரி பட வசனத்தையே பேசியிருந்தார்.
வலிமையில் அஜித் ஏகப்பட்ட அட்வைஸ்களாகவே சொல்லி இருந்தார். ஆனால், அதையெல்லாம் மீறி சின்ன சின்ன வசனங்கள் இந்த ஆண்டு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதில், சில வசனங்கள் கிரிஞ்சாக தெரிந்தாலும் 2கே கிட்ஸ்களின் ஃபேவரைட் வசனமாக மாறி உள்ள டாப் 5 வசனங்கள் என்ன என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்..
புத்தம் புது பொலிவுடன் பாபா ரீ ரிலீஸ்... ரஜினியின் பிறந்த நாளில் காத்திருக்கும் மெகா ட்ரீட்!

இதுதான் ஃபர்ஸ்ட் டைம்
தீபாவளிக்கு வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தில் காமெடி என்கிற பெயரில் ஏகப்பட்ட பாட்டில் கார்டு காமெடிகளை செய்து வெறுப்பேற்றினாலும், கடைசி கிளைமேக்ஸில் "இது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு.. ஆனால், இதுதான் ஃபர்ஸ்ட் டைம்" என வரும் வசனம் மக்களிடையே பெரிதாக வரவேற்கப்பட்டு ஏகப்பட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டன.

உளவுச் செய்தி
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனான சியான் விக்ரம் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியிடம் வீர வாளை கொடுத்து "கடம்பூர் சம்பூவராயர் மாளிகையில் ஏதோ நடக்கவிருப்பதாக ஒரு உளவுச் செய்தி வந்துள்ளது" என சொல்லும் காட்சியை வைத்து "பக்கத்து தெருவில் தண்ணீர் வருவதாக உளவுச் செய்தி", "ரேஷனில் அரிசி போடுவதாக உளவுச் செய்தி" என ஏகப்பட்ட டிரெண்டிங் மீம்களையே போட்டு மாஸ் காட்டினர் ரசிகர்கள்.

ஆம்ஃபா.. ஆஹாம்ஃபா
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்திகேயன், பிரியா மோகன், சூரி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டான் திரைப்படம் 100 கோடி வசூல் வேட்டை நடத்தியது. அந்த படத்தில் இடம்பெற்ற "ஆம்ஃபா.. ஆஹாம்ஃபா" வசன காமெடி காட்சியையும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் தங்களது சமூக வலைதள போஸ்ட்டுகளில் போட்டு பயன்படுத்த ஆரம்பித்தனர்.

அந்த சப்ஜெக்ட் எடுக்கும்போது
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ஏகப்பட்ட பஞ்ச் வசனங்கள் மக்கள் மத்தியில் டிரெண்டாகின. பகத் ஃபாசில் சொல்லும் "ரூல்ஸ் இருந்தால் மீறப்படும்" மற்றும் கமல் சொல்லும் "இந்த மாதிரி நேரத்துல வீரன்களாம் என்ன சொல்லுவாங்க தெரியுமா.. பார்த்துக்கலாம்" வசனங்கள் அதிக ரசிகர்களை ஈர்த்தன. அதிலும், விஜய்சேதுபதி எண்ட்ல போய் திரும்புனீங்கனா.. டாக்டர் தர்மலிங்கம்னு ஒருத்தர் இருப்பாரு என நோயாளிக்கு சொல்லும் போது.. அப்போ நீங்க டாக்டர் என கேட்க.. "அந்த சப்ஜெக்ட் எடுக்கும் போது நான் காலேஜ்க்கு போகல" என விஜய்சேதுபதி சொல்லும் வசனத்தை பல இளைஞர்களும் பல இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

சொல்லுங்க மாமாக்குட்டி
இந்த ஆண்டின் சென்ஷேனலான வார்த்தையாகவே லவ் டுடே படத்தில் இடம்பெற்ற அந்த "சொல்லுங்க மாமாக்குட்டி" வசனம் மாறிவிட்டது. மாமாக்குட்டி என சொல்லக் கூட ஒரு பெண் தோழி இல்லையே என 90ஸ் கிட்ஸ் ஃபீல் பண்ணும் அளவுக்கு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அப்படியொரு கேட்சியான வசனத்தை வைத்துள்ளார். "மாமாக்குட்டி.. அவன் என்ன குட்டியாவா இருக்கான்.. பார்க்க பன்னி மாதிரி இருக்கான்" என ஹீரோ கோபப்படும் காட்சிகளை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.