Just In
- 27 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 49 min ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 1 hr ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
Don't Miss!
- News
"அது"தான் பிரச்சினையா இருக்காம்.. புதுவையில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியுமா?
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹீரோவுக்கு இணையா வாங்குறாங்களாமே? ஷங்கர், முருகதாஸ், அட்லீ...டாப் இயக்குனர்களின் லேட்டஸ்ட் சம்பளம்
சென்னை: தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களின் சம்பளமும் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கான சம்பளம் படங்களின் ஹிட்டை பொறுத்தே அமைகிறது.
டாப் ஹீரோக்கள் ஒரு படம் ஹிட்டானால் அடுத்த படத்துக்கு கன்னாபின்னாவென்று தங்களது சம்பளத்தை உயர்த்தி விடுகின்றனர்.

பட்ஜெட்டும் ஏறுகிறது
ரஜினிகாந்தின் சம்பளம் எங்கேயே போய்விட்டதாக இன்டஸ்ட்ரி பேசிக்கொண்டிருக்க, நடிகர் விஜய் அடுத்தப் படத்துக்கு ரூ.90 கோடி வரை கேட்பதாகக் கூறப்படுகிறது. அஜீத்தும் 60 ல் இருந்து 65 வரை கேட்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் சம்பளம் ஏற ஏற படத்தின் பட்ஜெட்டும் ஏறிவிடுகிறது.

இயக்குனர் ஷங்கர்
இந்நிலையில் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களும் சம்பளத்தை உயர்த்திவிட்டதாகக் கூறுகிறார்கள். இயக்குனர் ஷங்கர்தான் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனராக இருந்தார். இப்போதும் அவர்தான் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.35 கோடியில் இருந்து ரூ.40 கோடி என்கிறார்கள்.

குறைத்தாரா?
இந்தியன் 2 படத்துக்கு முதலில் 50 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும் மொத்த சம்பளம் மற்றும் பட்ஜெட்டை பார்த்தால் எங்கயோ சென்றதால், எல்லோரும் செலவுகளை குறைத்தால்தான் படத்தை குறிப்பிட்ட தொகைக்கு விற்க முடியும் என்று லைகா தரப்பில் பேசியதாகவும் இதையடுத்து கமல், ஷங்கர் உட்பட அனைவரும் தங்கள் சம்பளத்தை குறைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஷங்கர் ரூ.40 கோடி வாங்கியுள்ளார் என்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ்
அடுத்த இடத்தில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினி படத்தை இந்தியில் இயக்கப் போன
முருகதாஸ், அங்கிருந்து அப்படியே தனது சம்பளத்தையும் உயர்த்திக்கொண்டு வந்தார். ரஜினியின் தர்பார் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ.28 ல் இருந்து ரூ.30 கோடி என்கிறார்கள். அடுத்து ஒரு இந்தி படம் இயக்கி விட்டு தமிழுக்கு வந்தால், இது அப்படியே உயரும் என்றும் சொல்கிறார்கள்

இயக்குனர் அட்லீ
இயக்குனர் அட்லீ, விஜய் நடிப்பில் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் படங்கள் வசூலில் கலக்க, ஒவ்வொரு படத்துக்கு சில பல கோடிகளை ஏற்றுக்கொண்டே போனார். இப்போதை அவருடைய சம்பளம் ரூ.25 கோடியாம். அடுத்து ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். அதை இயக்கினால் அவரது சம்பளம் ஷங்கருக்கு சமமாகும் என்பது கோலிவுட் டாக்.

பாண்டிராஜ்
கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த பாண்டிராஜ், இப்போது ரூ.15 கோடி சம்பளம் கேட்கிறாராம். அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தை படத்தை அவர் இயக்கப் போவதாகக் கூறுகிறார்கள். இந்தப் படமும் ஹிட்டானால், பாண்டிராஜ் அடுத்து அட்லியின் சம்பள இடத்தைப் பிடிப்பாராம்.

வெற்றிமாறன்
இவர்கள் இப்படியென்றால், அசுரன் படத்துக்கு மெகா வெற்றியை குவித்த வெற்றிமாறன் அந்தப் படத்துக்கு வாங்கிய சம்பளம் ரூ.8 கோடிக்குள் என்கிறார்கள். இப்போது சூரி நடிப்பில் இயக்கப் போகும் படத்துக்கு, அசுரன் நேரத்திலேயே அட்வான்ஸ் வாங்கிவிட்டதால் சம்பளம் குறைவுதான் என்கிறார்கள். ஆனால், அடுத்து சூர்யா நடிப்பில் இயக்கும் வாடிவாசல் படத்துக்கு அதிகமாக இருக்கும் என்கிறது கோலிவுட்.