»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அமலா, நளினி, மும்தாஜ் என தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த நாயகிகள், கவர்ச்சிக்கன்னிகளை தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய டி.ராஜேந்தர் (இப்போது நியூமராஜிப்படிவிஜய ராஜேந்தர்) தனது அடுத்த படத்தில் இரண்டு மில்க் ஷேக்குகளை அறிமுகப்படுத்துகிறார்.

ஒருவர் பெயர் மேக்னா நாயுடு. இனனொருவர் விபூதி. இதில் மேக்னாவின் பெயரை அப்படியேஇருக்க விட்டுவிட்ட ராஜேந்தர், விபூதியின் பெயரை மட்டும் தர்ஷிணி (இதுவும் நியூமராலஜியின்மகிமை தான்) என்று மாற்றியிருக்கிறார்.

மேக்னா ஆப்பிள் மில்க் ஷேக் மாதிரி என்றால், தர்ஷிணி மேங்கோ மில்க் ஷேக் மாதிரி படுபிரஷ்ஷாக இருக்கிறார்.

தன் மகன் சிம்புவிடம் கால்ஷீட் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போன ராஜேந்தர் (கதைநல்லாயில்லையே அப்பா என்று சொல்லி வெட்டி விட்டுவிட்டாராம் சிம்பு) இப்போது அஜீஸ் என்றபுதுமுகத்தை அறிமுகப்படுத்தி தானும் நடிப்பில் குதிக்கிறார்.

படத்தின் பெயர் வீராசாமி. (ஆற்காடு வீரசாமி மீது என்ன காட்டமோ).

இதில் ஹீரோயின்களைத் தேடி மும்பைக்குப் போன ராஜேந்தர், நூற்றுக்கணக்கான மாடல்களைப்பார்த்து அதில் தேர்வு செய்தது இந்த மேக்னாவும் தர்ஷிணியும். இவர்களை தேர்வு செய்யஅப்பாவுக்கு உதவியது சிம்புவே தான். (இதுல மட்டும்!)

சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தரே தயாரிக்கும் இந்தப் படத்தில் லைட் பாய் வேலையைத்தவிர வேறு எல்லா வேலைகளையும், அதாவது, கதை, திரைக்கதை, இசை, பாடல்கள், வசனம்,ஒளிப்பதிவு, டைரக்ஷன் என எல்லாவற்றையும் வழக்கம் போல் அவரே கவனிக்கப் போகிறார்.

அத்தோடு முரட்டு வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். வழக்கமான அடிச்சா வாங்கிக்க.. முடிஞ்சாதாங்கிக்க ரக அடுக்ககடுக்கு வசனங்களும் பேசப் போகிறார். சும்மாவே ரொம்பப் பேசுவார். இதில்,வக்கீல் வேஷம் வேறு. கேட்கவே வேண்டாம். சட்டத்தை ஒரு வழி பண்ணிவிடுவார்.

படத்தில் இளம் ஹீரோ அஜீசுக்குத் தான் இரண்டு இளம் ஜோடிகளான தர்ஷிணியும் மேக்னாவும்.தனக்கு ஜோடியாக கொஞ்சம் மூத்த நடிகையை புக் செய்யப் போகிறாராம் ராஜேந்தர். (விஜய்காந்த்,ரஜினி, சத்யராஜ், சரத்குமார் அண்ட் கோ கவனிக்க..)

வழக்கம்போல் கார்ட்போர்ட் அட்டைகளால் ஆன இதயம், கண், நாக்கு, காது போன்றவற்றின்பிரமாண்டமான செட்களைப் போட்டுத் தான் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதற்காக போரூரில் உள்ள தனது பண்ணையில் செட்களை செய்ய மர அறுவை ஆட்களைநூற்றுக்கணக்கில் இறக்கிவிட்டுள்ளார்.

படத்தில் தம்ப்ர்ர்ர்ரீரீ..... வெண்ணிற ஆடை மூர்த்தியும் நடிக்கிறார். கூடவே ஒரு பெண்வில்லியையும் அறிமுகப்படுத்தப் போகிறாராம் விஜய டி.ஆர்.

பாசம், நேசம், வேஷம், தோஷம் எல்லாம் கலந்த இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில்சூட் செய்து கொண்டிருக்கிறார். (தெலுங்கிலும் அடுக்கு மொழி வசனமா? தேவுடா).

சமீபத்தில் தான் திமுகவில் இருந்து மரியாதையாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டார் டி.ஆர்.இதனால் அந்தக் கட்சியை படத்தில் சிம்பு ஸ்டைலில் கட்டம் கட்டி தாக்கும் வசனங்கள் நிறையவேஇருக்கிறதாம்.

டி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட நளினியில் இருந்து ஜீவிதா வரையிலான ஹீரோயின்கள் சோடைபோனதில்லை. மும்தாஜும் இன்னும் பீல்டில் இருந்து கொண்டிருக்கிறார்.

மேக்னாவும் தர்ஷிணியும் தேறுவார்களா என்று பார்ப்போம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil