»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அஷ்டாவதானி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் டி.ராஜேந்தர் (இப்போது விஜய டி.ராஜேந்தர்) தமிழ் சினிமாவில்நுழைந்து 25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையும், தனது புதிய படமான வீராசாமியின் தொடக்க விழாவையும் ஒரே நேரத்தில் படுவிமரிசையாகக் கொண்டாடினார்.

ஒரு தலை ராகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய டி.ஆர் இதுவரை 22 படங்களைஇயக்கி நடித்துள்ளார். 23வது படமாக வீராசாமியை உருவாக்கவுள்ளார்.

திரையுலகில் வெள்ளி விழா கண்டுள்ள விஜய டி.ராஜேந்தர் அந்த விழாவையும், புதிய படமானவீராசாமி தொடக்க விழாவையும் சென்னையில் கொண்டாடினார்.

கோடம்பாக்கம் பத்மாராம் கல்யாண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வீராசாமி படத்தொடக்க விழா நடந்தது. திரையுலகின் முன்னணிப் பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

விழாவில் சிலம்பரசனின் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அத்தோடு, விஜயடி.ராஜேந்தரின் புதிய கட்சியான லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களும்கணிசமான அளவில் (!) கலந்து கொண்டனர்.

படத்தைப் பற்றி டி.ஆர் கூறுகையில், ஒரு தலை ராகத்தில் டி.ஆர் பிறந்தான். வீராசாமியில் விஜய டி.ஆர்.பிறக்கிறான் என்றார். படத்தில் இவருக்கு ஜோடியாக மும்தாஜ் நடிக்கவிருப்பதையும், அதற்காக அவர் உடம்பைக்குறைத்து ஸ்லிம் ஆனதையும் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

புதுத் தகவல், படத்தின் மும்தாஜின் கேரக்டருக்குப் பெயர் சால்ட் கோட்ட சரசுவாம். ஏறக்குறைய ஒரு அடிதடிபார்ட்டி ரேஞ்சுக்குத்தான் இவரது கேரக்டரும் இருக்கிறதாம்.

புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் எடுக்கப்படும் படம் என்பதால், படத்தில் அரசியல் வாடைதூக்கலாக இருக்குமா என்று கேட்டால், இல்லைவே இல்லை, இது முழுக்க முழுக்க காதல் படம் என்று டி.ஆர்.அடித்துச் சொல்கிறார்.

வழக்கம்போல, தியேட்டர்களுக்குப் போய் புரொஜெக்டரில் படத்தை ஒட்டுவதைத் தவிர மீதி எல்லாவேலைகளையும் டி.ஆரே கவனிக்கிறார். இப்போது உங்க பார்முலா எல்லாம் எடுபடுமா என்று கேட்டால், படம்பூஜை போடுவதற்கு முன்பே எல்லா ஏரியாவும் விற்றுவிட்டது. என் மேல எல்லாருக்கும் நம்பிக்கையிருக்குஎன்கிறார்.

பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்வதுதான் இப்போதைய டிரெண்ட். ஆனால் டி.ஆர். செட்களின் மீதானபாசத்தை இன்னும் நம்பிக்கை விடவில்லை. போரூரில் உள்ள தனது மாபெரும் தோட்டத்திலேயே வீராசாமிபடத்துக்காக, மார்க்கெட், மருத்துவமனை, கோயில், வீடுகள், போலீஸ் ஸ்டேஷன், வீடுகள் அடங்கிய ஒரு குட்டிநகரத்தை நிர்மாணித்துள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை இங்குதான் படமாக்கப்போகிறார். முதல்கட்ட படப்பிடிப்பை 15 நாட்கள்ஹைதராபாத்தில் நடத்திவிட்டு, பின்பு இந்த செட்டில் ஐக்கியமாகப் போகிறாராம்.

படத்தில் டி.ஆர். ஒரு வக்கீல் கம் தாதா. நீதிமன்றத்தில் வாதாடுவதை பகுதி நேரமாகவும், காதலைச் சேர்த்துவைப்பதை முழு நேரமாகவும் செய்கிறாராம். காதலர்களாக அஜிஸ்- தர்ஷினி ஜோடி நடிக்கிறது. இரண்டுமே புதுசு.

கல்லூரி மாணவி மற்றும் மாடலிங் பெண் வேடத்தில் மேக்னா நாயுடு நடிக்கிறார். மூவரும் மும்பை இறக்குமதி.வில்லன் கூட மும்பைதான்.

ஒரு விழாவில் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசியததற்காக த்ரிஷாவை வாங்கு வாங்கு என்று வாங்கியடி.ஆர்., இப்போது தமிழ் நடிகைகளை நம்பாமல் வரிசையாக மும்பை பெண்களை இறக்குமதி செய்வது

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil