»   »  திரிஷா பிறந்த நாள்-ரசிகர்கள் தடபுடல்!

திரிஷா பிறந்த நாள்-ரசிகர்கள் தடபுடல்!

Subscribe to Oneindia Tamil

தென்னிந்தியாவின் தேவதை என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் திரிஷாவின் பிறந்த நாளை சமூக சேவைகளுடன் தடபுடலாக கொண்டாட அவரது ரசிகர் பிளஸ் ரசிகை மன்றங்கள் தீவிரமாகி வருகின்றன.

கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை திரிஷா ஒரு ஸ்டார் நடிகையாக மட்டுமே இருந்தார். ஆனால் இப்போது அவர் ரசிகர் மன்றத்துடன் கூடிய சூப்பர் நடிகையாக மாறியுள்ளார்.

கடந்த ஆண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல் முறையாக திரிஷாவுக்கு ரசிகர் மன்றம் வைக்கப்பட்டது. சென்னையில் தொடங்கப்பட்ட இந்த ரசிகர் மன்றம், திரிஷா படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கட் அவுட் வைத்தும், பாலாபிஷேகம் நடத்தியும், அசத்தினர்.

ஒரு முறை ஜெயம் ரவி ரசிகர்களுக்கும், திரிஷா ரசிகர்களுக்கும் மோதலும் ஏற்பட்டு பரபரப்பானது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் அடிதடியான ரசிகர்களாக இருக்க வேண்டாம், சமூக சேவை செய்யுங்கள், பாலாபிஷேகம் வேண்டாம் என்று அறிவுரை கூறினார் திரிஷா.

இதைத் தொடர்ந்து திரிஷாவின் ரசிகர் மன்றங்கள் சமூக சேவையில் அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் வருகிற மே 4ம் தேதி திரிஷாவுக்கு பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் பல்வேறு சமூக சேவைகளுக்கு ரசிகர் மன்றங்கள் திட்டமிட்டுள்ளனவாம்.

ரத்த தானத்தில் ஆரம்பித்து பல தொண்டுகளை செய்யவுள்ளனராம். திரிஷாவும் அன்றைய தினம் அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைச் சந்தித்து உரையாடப் போகிறாராம்.

பிறந்த நாளும் அதுவுமா, இன்டர்நெட்டில் பஞ்சாயத்து எதுவும் பண்ணிடாதீங்கப்பா புண்ணியவான்களே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil