»   »  அவர் அழைப்பாரா?

அவர் அழைப்பாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க அழைப்பு வருமா, ரஜினி அழைப்பாரா என்று ஆவலோடு காத்திருக்கிறார் திரிஷா.

கை நிறையப் படங்களுடன் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு படு வேகமாக ஓடிக் கொண்டிருந்த திரிஷா, தனக்குத்தானே ஸ்பீட் பிரேக்கர் போட்டுக் கொண்டு ஒரு படத்துடன் நிதானமாகியுள்ளார்.

எல்லாம் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க எந்த நேரமும் அழைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பால்தான்.

திரிஷாவுக்கு இதுவரை நடித்த எந்தப் படத்திலும் திருப்தி வரவில்லையாம். இதுவரை நடித்த படங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஒரு படத்தைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்.

என்ன இப்படி சொல்லிட்டீங்க என்று திரிஷாவிடம் கேட்டால், லேசா லேசா படத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு போய் விடலாம் என்றுதான் எண்ணியிருந்தேன்.

ஆனால், மெளனம் பேசியதே, சாமி, மனசெல்லாம் என தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுக்க ஆரம்பித்ததால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்தேன். அந்தப் படங்ளும் தோல்வி அடைந்திருந்தால் மாடலிங்கில் செட்டிலாகியிருப்பேன். இந்நேரம் கல்யாணம் கூட ஆகிப் போயிருக்கும்.

தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார் நடிகையாக வருவேன் என்று கனவில் கூட நான் நினைத்ததில்லை. அதுவும் இத்தனை குறுகிய காலத்திற்குள் வந்திருப்பது வியப்பாக உள்ளது.

பீமா, கிரீடம் ஆகிய படங்களை முடித்துள்ளேன். தெலுங்கில் அடவரி .. ரிலீஸ் ஆகி ஹிட் ஆகியுள்ளது. எனது அடுத்த படம் குறித்து பெரும் பேச்சு நிலவுகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஊகச் செய்திகள்தான்.

இப்போதைக்கு விஜய்யுடன் ஜோடியாக நடிக்க மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளேன். மற்ற படம் எதுவும் இல்லை.

ரஜினி சாருடன் நடிப்பது குறித்து எனக்கு யாரும் எந்தத் தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை. மற்றவர்களைப் போல நானும், ரஜினி சாரிடமிருந்து அழைப்பு வருமா என்று ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்.

ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க அவர்தான் காரம். எனவே அவர் எப்போது நடிக்கக் கூப்பிட்டாலும் உடனே டேட்ஸ் தர காத்திருக்கிறேன் என்றார் திரிஷா.

அவர் அழைப்பாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil