»   »  திரிஷாவா .. ஓடும் ஹீரோக்கள்!

திரிஷாவா .. ஓடும் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரிஷாவுடன் இணைந்து நடிக்க தயங்கி பல ஹீரோக்கள் அவர் நடிக்கும் அபி படத்தில் நடிக்காமல் ஓடுகிறார்களாம்.

பிரகாஷ் ராஜ் தயாரிக்க, ராதா மோகன் இயக்க உருவாகும் புதிய படம் அபி. அழகிய தீயே, மொழி ஆகிய இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் இணைகிறார்கள் பிரகாஷ் ராஜும், ராதா மோகனும்.

பல பெயர்களைப் பரிசீலித்து கடைசியில் அபி என்ற பெயரை முடிவு செய்துள்ளனராம் பிரகாஷ் ராஜும், ராதா மோகனும். கதையையும், படத்தின் பெயரையும் வெற்றிகரமாக முடித்து விட்ட இருவராலும், ஹீரோவைத்தான் இதுவரை இறுதி செய்ய முடியவில்லையாம்.

அபி படத்தில் நாயகியாக நடிப்பவர் திரிஷா. வழக்கமாக பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வரும் படத்தில் ஹீரோயினுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். எனவே அபி படத்தில் கண்டிப்பாக திரிஷாவுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். எனவே இப்படத்தில் நடிக்க ஹீரோக்கள் தயங்குகிறார்களாம்.

அழகிய தீயே படத்தில் நவ்யா நாயருக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருந்தது. மொழி படத்தில் ஜோதிகாவும், சொர்ணமால்யாவும்தான் கோலோச்சினார்கள்.

இந்த நிலையில், அபி படத்திலும் திரிஷாவுக்குத்தான் பவர்புல் ரோலாம். இதுகுறித்து ராதாமோகன் கூறுகையில், அபி படம் ஹீரோயின் சப்ஜெக்ட். திரிஷாவுக்குத்தான் இந்த கேரக்டர் பொருந்தும். திரிஷாவின் தந்தையாக நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். படத்தில் புதுமுகம் ஒருவர் ஹீரோவாக நடிப்பார் என்றார்.

முன்னணி ஹீரோக்கள் கிடைக்காததால்தான் புதுமுகத்தை ஹீரோவாக போடும் முடிவுக்கு வந்தார்களாம். முன்னணி ஹீரோக்கள் மட்டுமல்லாமல், செகண்ட் ரேங்க் ஹீரோக்கள் கூட இதில் நடிக்கத் தயங்கினார்களாம்.

பிரசன்னா கூட கிடைக்கலையா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil