»   »  மகேஷ் பூபதியுடன் ஆடிய திரிஷா!!!

மகேஷ் பூபதியுடன் ஆடிய திரிஷா!!!

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் மட்டுமே ஆடி வந்த நம்ம திரிஷா, முதல் முறையாக டென்னிஸ் ஸ்டார் மகேஷ் பூபதியுடன் டென்னிஸ் ஆடிய கண்கொள்ளாக் காட்சி சென்னையில் அரங்கேறியது.

கொல்கத்தாவில் செப்டம்பர் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை டபிள்யூ.டி.ஏ சன்பீஸ்ட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக சென்னையில் வித்தியாசமான ஒரு டென்னிஸ் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் ஸ்டார் வீரர் மகேஷ் பூபதி கலந்து கொண்டார். அவருடன் இணைந்து ஆடியவர் தான் விசேஷமானவர். அவர் வேறு யாருமல்ல, தென்னிந்திய கனவு தேவதை திரிஷா.

இவர்களின் கலக்கல் டென்னிஸ் போட்டி மகாபலிபுரத்தில் உள்ள சேரட் பீச் ரிசார்ட்டில் நடந்தது. மகேஷ்பூபதி, திரிஷா ஒரு ஜோடியாகவும், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிகல், டிவி வர்னணையாளர் சாரு சர்மா இன்னொரு ஜோடியாகவும் எதிரும் புதிருமாக மோதினர்.

இதில் பூபதி, திரிஷா ஜோடி மூன்றில் இரண்டு செட்களை வென்று போட்டியில் வெற்றியும் பெற்றது.

மகேஷ் பூபதியுடன் ஆடிய பின்னர் வியர்க்க விறுவிறுக்க திரிஷா மகிழ்ச்சிக் களிப்புடன் வந்தார். எப்படி இருந்தது இந்த டென்னிஸ் ஆட்டம் என்று கேட்டபோது, படு ஜாலியாக பேசினார் திரிஷா.

இது வித்தியாசமான எக்ஸ்பீரியன்ஸ். பூபதியுடன் விளையாடுவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனக்கு முன்பே கொஞ்சம் டென்னிஸ் தெரியும் என்றாலும் முழுமையாக தெரியாது. இருந்தாலும் பூபதியுடன் இணைந்து ஆடியதால் பெரிய எக்ஸ்பர்ட் போல நினைத்துக் கொண்டு தூள் கிளப்பி விட்டேன் என்றார்.

இந்தப் போட்டியில் ஆடிய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா, திரிஷாவை விட படு க்யூட்டான அழகு ஆட்டக்காரி. ஸ்குவாஷில் உலக அளவில் கலக்கி வருபவர். சினிமாவில் நடிக்க இவரை பலரும் முயன்று தோற்றுப் போய் விட்டனர். அந்த அளவுக்கு ஸ்குவாஷ் மீது பைத்தியம் பிடித்தவராம் தீபிகா.

இரண்டு அழகுப் புயல்களுடன் ஆடிய மகேஷ் பூபதிதான் உண்மையில் கொடுத்து வைத்தவர்.

இவர்களின் ஆட்டத்தில் வென்றது டென்னிஸ், ஆனால் வீழ்ந்தது அதைப் பார்த்தவர்களின் இதயங்கள்!

Please Wait while comments are loading...