»   »  தியேட்டரில் அஜீத் - திரிஷா ரசிகர்கள் மோதல்!

தியேட்டரில் அஜீத் - திரிஷா ரசிகர்கள் மோதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத், திரிஷா ரசிகர்களிடையே, கிரீடம் பட கட் அவுட், பேனர் வைப்பது தொடர்பாக மோதல் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர்களுக்கு இணையாக திரிஷாவுக்கும் ரசிகர் மன்றம் உருவாகியுள்ளது. மற்ற ஹீரோக்களின் ரசிகர் மன்றம் போலவே, திரிஷா ரசிகர் மன்றங்களும் கலக்கலாக செயல்பட்டு வருகின்றன.

திரிஷா பட ரிலீஸின்போது கட் அவுட் வைப்பது, பேனர் கட்டுவது, பாலாபிஷேகம் என தூள் கிளப்பி வருகிறார்கள் திரிஷா ரசிகர்கள். சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி, திரிஷா நடித்த உனக்கும் எனக்கும் பட ரிலீஸின்போது இருவரின் ரசிகர்களும் கட் அவுட் வைப்பது தொடர்பாக மோதிக் கொண்டபோது பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அஜீத் ரசிகர்களுக்கும், திரிஷா ரசிகர்களுக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது. இருவரும் இணைந்து நடித்துள்ள கிரீடம் படம் நாளை திரைக்கு வருகிறது.

தல நடித்த கடைசிப் படமான ஆழ்வார், டங்குவாராகி விட்டதால் அதிருப்தி அடைந்துள்ள அஜீத் ரசிகர்கள், கிரீடம் படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளனர்.

எனவே கிரீடம் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கட் அவுட் வைப்பது, பேனர் கட்டுவது என அமளி துமளி படுத்தி வருகின்றனர்.

அதேசமயம், திரிஷாவின் ரசிகர்களும் பேனர், கட் அவுட் வைத்து அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதற்கு அஜீத் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனராம். தல மட்டும்தான் கட் அவுட்டுக்குத் தகுதியானவர், உங்களது கட் அவுட், பேனர் எல்லாம் இருக்கக் கூடாது என திரிஷா ரசிகர்களை அவர்கள் மிரட்டுகிறார்களாம்.

இதனால் கடுப்பான திரிஷா ரசிகர்கள், அஜீத் ரசிகர்களுடன் பல இடங்களில் மோதலில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது. திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில் இரு ரசிகர்களும் மோதலில் இறங்கினர்.

திரிஷா ரசிகர்கள் வைத்த கட் அவுட்களை அஜீத் ரசிகர்கள் அப்புறப்படுத்தியதால் இந்த மோதல் மூண்டது. இதேபோல காசி தியேட்டரிலும் பிரச்சினை உருவானது.

இருவரின் ரசிகர்களும் ஆங்காங்கு மோதலில் இறங்கியுள்ளதால் கிரீடம் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் உரிமையாளர்கள் என்ன நடக்குமோ என்ற கவலையில் மூழ்கியுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil