»   »  அமலா வழியில் திரிஷா

அமலா வழியில் திரிஷா

Subscribe to Oneindia Tamil


அமலா பணியில் விலங்குகளுக்கான நல மையம் ஒன்றை அமைக்கும் யோசனையில் இருக்கிறாராம் திரிஷா.

Click here for more images

இந்தியாவில் விலங்குகள் மீது தனிப் பிரியம் கொண்டவர்கள் யார் என்றால் மேனா காந்தியும், அமலாவும்தான் நினைவுக்கு வருவார்கள். இவர்களை விட பெரிய பெரிய ஆட்களும் இருக்கிறார்கள் என்றாலும் கூட இவர்களது பிரபல்யம் காரணமாக இவர்களின் விலங்குப் பாசம் இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்று விட்டது.

நடிகையாக படு பிசியாக நடித்துக் கொண்டிருந்த அமலா, நாகார்ஜுனாவைக் கல்யாணம் செய்து கொண்ட பின்னர் ஹைதராபாத்தில் விலங்குகளுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். ஆந்திராவிலேயே மிகவும் பிரபலமானது இந்த விலங்குகள் நல மையம்.

இப்போது அதே பாணியில் சென்னையில் ஒரு விலங்குகள் நல மையத்தைத் தொடங்கும் யோசனையில் இருக்கிறாராம் திரிஷா. இதுகுறித்து சமீப காலமாக தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம். திரிஷாவின் ஐடியாவுக்கு அவரது தாயார் உமா ஓ.கே. சொல்லி விட்டாராம்.

இதை எப்படி நிறைவேற்றுவது, எப்படி நடத்துவது என்று தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறாராம் திரிஷா. விரைவில் இதுகுறித்து அறிவிக்கக் கூடும் என்று தெரிகிறது.

அமலாவை விட அசத்தலாக நடத்துவாரா திரிஷா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more about: amala, animals, trisha
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil