»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மணி ரத்னம் தயாரித்து வரும் அடுத்த தமிழ்ப் படத்தில் சூர்யாவும், மாதவனும் நடிக்கிறார்கள்.

ஸ்ரீகாந்தும்நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

அவருக்குப் பதில் ஷாம் நடிப்பதாக இருந்தது. இப்போது அதிலும் மாற்றம்.

பாய்ஸ் படத்தின் ஹீரோக்களில்ஒருவரான சித்தார்த் தான் அந்த 3வது ஹீரோவாக நடிக்கிறார்.

மணி ரத்தினத்தின் உதவியாளர்தான் இந்த சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.

மணியிடம் கடந்த சில காலமாய்உதவி இயக்குனராய் பயிற்சி எடுத்து வருகிறார்.

இந் நிலையில் தான் பாய்ஸ் படத்தில் அவரை நடிக்க வைத்தார்ஷங்கர்.

மணியின் இந்தப் புதிய படத்தில் மீரா ஜாஸ்மின் நடிப்பது நமக்குத் தெரிந்த செய்தி தான்.

இந்தப் படத்தில்இரண்டாவது ஹீரோயினுக்காக பல புதுமுகங்களை வரவழைத்துப் பார்த்த மணிக்கு யாரையும் பிடிக்கவில்லையாம்.

கடைசியில் அந்த ரோலுக்கு திரிஷாவைப் பிடித்துப் போட்டுவிட்டார்.

மேலும் இருவர் மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் மிக வித்தியாசமான வேடங்களில் நடித்தபிரகாஷ் ராஜ், இந்தப் படத்திலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார்.

படத்திற்கு முதலில் ஆயுத எழுத்து என்று பெயர் வைத்த மணி அதை மாற்றிவிட்டார். வேறு பெயர் இன்னும்முடிவாகவில்லையாம்.

இசை ஏ.ஆர்.ரஹ்மான் தான். பாடல்கள் வைரமுத்து. சில கால இடைவெளிக்குப் பிறகு ரஹ்மானின் இசையில் முழுப்படத்தின் பாடல்களையும் எழுதவுள்ளார் வைரமுத்து.

மணிரத்னத்துக்காக தங்களது கருத்து வேறுபாடுகளைஇருவரும் மூட்டை கட்டி வைத்துவிட்டார்களாம்.

இந்தப் படத்தில் சிம்ரனும் நடிப்பதாக இருந்தது. ஆனால், ஸ்பாட்டிலேயே டயலாக்ஸையும் ரெக்கார்ட் செய்யமணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். இதற்கு சிம்ரன் சரிப்பட மாட்டார் என்பதால் அவரை படத்திலிருந்துதூக்கிவிட்டாராம்.

இதே படத்தைத்தான் இந்தியிலும் தயார் செய்து முடித்திருக்கிறார் மணிரத்னம். அதில் சிம்ரன் நடித்தார். இந்திப்படம் விரைவில் ரிலீஸ் ஆகுமாம். பின்னர் தான் தமிழ் படம் ரிலீஸ் செய்யப்படுமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil