»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் பேசுவது இழுக்கு என்று கருதும் த்ரிஷாவுக்கு டி.ராஜேந்திரடம் திட்டு கிடைத்தது.

த்ரிஷா கிருஷ்ணன் சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ்ப் பெண் தான். ஆனாலும் அவர், தமிழில் பேசுவதைஅநாகரீகமாகக் கருதுபவர். எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுவார். இதை சமீபத்தில் விக்ரம் கூட ஒருபேட்டியில் வருத்தப்பட்டு சொல்லியிருந்தார்.

இந் நிலையில் த்ரிஷாவை சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் வைத்து ஒரு பிடி பிடிதார் டி.ராஜேந்தர்.

நியூ பட கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்ததது. அப்போது பேசிய சிம்ரன், கிரண், த்ரிஷா ஆகியோர்ஆங்கிலத்தில் பேசினார்கள். பின்னர் பேச வந்த டி.ராஜேந்தர்,

தொடர்பான செய்திகள்பு பேசிய நடிகைகள் சிம்ரன், கிரண், த்ரிஷா ஆகியோர் ஆங்கிலத்தில் பேசினார்கள். சிம்ரன், கிரண்ஆகியோருக்குத் தமிழ் தெரியாது.

ஆங்கிலத்தில் பேசினார்கள் சரி. த்ரிஷா, தமிழ் பெண். தமிழ்ப் படங்களில்நடிக்கிறார். தமிழில் பேசக் கூடாதா? ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறார்?


இனிமேல் தமிழில் பேசுங்கள். திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள். மற்ற மாநிலங்களைவிடதமிழகத்தில் கேளிக்கை வரி அதிகமாக உள்ளது. திரைத்துறையைக் காப்பாற்ற யாரும் இல்லை. தமிழ்த்திரையுலகம் அழிந்து கொண்டிருக்கிறது. திருட்டு விசிடியில் திரைப்படம் பார்க்கக் கூடாது என்று பொரிந்துதள்ளிவிட்டு உட்கார்ந்தார்.

நியூ பட நிகழ்ச்சியில் கிரண்
விழாவுக்கு வந்தவர்கள் ஆடிப் போய் பார்க்க, முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த த்ரிஷாவின் முகம் இருண்டுபோனது.

பின்னர் பேசிய சரத்குமார், த்ரிஷா தமிழிலேயே பேசி இருக்கலாம். இருந்தாலும் டி.ராஜேந்தரின் பேச்சை, ஒருமூத்த கலைஞரின் அறிவுரையாக அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். வருத்தப்படத் தேவையில்லை என்று அவர்பங்குக்கு சோகத்தை மேலும் கூட்டிவிட்டார்.

இதனையடுத்து விஜய், சிலம்பரசன், அசோக், மகேஷ் பாபு, ஐஸ்வர்யா, இயக்குநர்கள் சரண், வசந்த், தரணி,தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் (தட்டுத் தடுமாறி) தமிழில் பேசினார்கள். கடைசி வரை த்ரிஷாவின் முகத்தில்சிரிப்பே இல்லை.

இனியாவது திருந்துவாரா த்ரிஷா?

கொசுறு: இந்த நிகழ்ச்சிக்கு கிரண் அணிந்து வந்த டிரஸ் அனைவரையும் கவர்ந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil