»   »  த்ரிஷா Vs

த்ரிஷா Vs

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழிலும், தெலுங்கிலும் தனக்கு வரும் வாய்ப்புகளை ஆசின் தட்டிப்பறிப்பதால் த்ரிஷா கடும் கடுப்பில் இருக்கிறார். நேருக்குநேர் சந்தித்தால் கூட முகத்தை திருப்பி விடுகிறார் மாமி.

தென் இந்தியாவில் இப்போதைக்கு நம்பர் ஒன் நடிகை யார் என்றால் அது த்ரிஷாவே தான். தெலுங்கில் வரிசையாக 3 படங்கள்ஹிட்டாகிவிட்டதால், த்ரிஷா காட்டில் சும்மா பெய்யெனப் பெய்யும் மழை தான்.

தமிழ், தெலுங்கில் கால்ஷீட் கொடுத்து மாள முடியாத அளவுக்கு கை நிறைய படங்களை வைத்திருக்கிறார் த்ரிஷா. இதனால்ரேட்டையும் கன்னாபின்னாவென்று உயர்த்தி தெலுங்கி ரூ. 90 லட்சத்தில் போய் நிற்கிறார். தமிழில் ரூ. 40 முதல் ரூ. 50 லட்சம் வரைகேட்கிறார் என்பது பழைய செய்தி.

தமிழில் விஜய்யுடன் 2 படங்களில் புக் ஆகி இருக்கும் த்ரிஷா, விக்ரம் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க இருந்தார்.

சிவகாசியில் விஜய்யுடன் நடித்துக் கொண்டே அவருடன் ஒரு தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.தெலுங்கில் வெற்றி பெற்ற அத்தனொக்கடெ என்ற படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தமிழில் எடுக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடித்ரிஷா தான்.

திருமலை ரமணா இந்தப் படத்தை டைரக்ட் செய்கிறார். தெலுங்கு ஒக்கடு தான் தமிழில் கில்லியானது. இதனால் இந்தப் படமும்கில்லி மாதிரி ஓடும் என்கிறார்கள்.

இப்படி பரபரப்பாக தமிழிலும், தெலுங்கிலும் நடித்துக் கொண்டிருந்தாலும் த்ரிஷா தனக்கு வரும் எந்த புதிய படத்தையும் இழக்கவிரும்புவதும் இல்லை. தேடி வருபவர்களிடம் எல்லாம் ஒரு அமெளன்ட்டை அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு கால்ஷீட்கொடுத்துவிட்டு காத்திருக்க வைக்கிறார்.

த்ரிஷாவுக்காக இவ்வாறு காத்திருக்கும் தயாரிப்பாளர்களை மடக்கி அந்த சான்ஸ்களை அப்படியே கொக்கி போட்டு இழக்கும்வேலையில் இப்போது மலையாளத்து மங்கை ஆசின் ஈடுபட்டுள்ளார். தெலுங்கில் இவரும் ஓரளவுக்கு பேமஸ் தான் என்பதாலும்த்ரிஷா கேட்கும் அநியாய சம்பளத்தாலும் வெறுத்துப் போய் இருக்கும் சில தயாரிப்பு பார்ட்டிகள் ஆசினிடம் மடங்கிவருகின்றன.

அத்தோடு த்ரிஷாவுக்குப் போகும் வாய்ப்புகளைத் தெரிந்து கொண்டு அங்கும் இடைமறிப்பு வேலை செய்து சான்ஸ்களைகொக்கு மாதிரி கொத்தி வருகிறார் ஆசின்.

விக்ரமுடன் மஜா படத்தில் முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். வழக்கம் போல இந்தப் படத்தின்தயாரிப்பாளரிடமும் த்ரிஷா பத்துக் கட்டளைகளை போட்டுள்ளார்.

இதனால் எரிச்சலான தயாரிப்பாளர் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தபோது, தானே அவரைத் தொடர்பு கொண்டுபேசியுள்ளார் ஆசின். அவ்வளவு தான், த்ரிஷாவை மஜாவில் இருந்து அப்படியே தூக்கி விட்டு அவருக்கு பதிலாக ஆசினை புக்செய்து விட்டார்கள்.

எப்படியும் தயாரிப்பாளர் தன்னிடம் தானே வரவேண்டும் என்று த்ரிஷா நினைத்துள்ளார். ஆனால் வாய்ப்பு ஆசினுக்கு போய்விட்டது என்பதை அறிந்த மாமி கொதித்து விட்டாராம்.

ஏற்கனவே தெலுங்கிலும் தன்னுடைய சில வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் ஆசின் மீது த்ரிஷா கடுப்பில் இருந்தார். இப்போதுகோலிவுட்டிலும் தன்னுடன் போட்டி போடுவதால் த்ரிஷாவுக்கு தலைக்கு மேல் கோபம்.

சமீபத்தில் கில்லி படத்தின் 200வது நாள் விழா சென்னை கன்னிமாரா ஹோட்டலில் நடந்தது. இந்த விழாவில் ரஜினி உட்படமுக்கிய திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கில்லியின் நாயகி த்ரிஷாவும் விழாவுக்கு வந்திருந்தார். சிறிது நேரம் கழித்து ஆசினும் விழாவுக்கு வந்தார். (இவருக்குவிஜய்யிடமிருந்து ஸ்பெஷல் அழைப்பு வந்ததாம்!!) த்ரிஷாவை பார்த்ததும் ஆசின் புன்னகைக்க, முகத்தை கடுகடுவெனவைத்தபடியே முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டாராம் விட்டாராம் த்ரிஷா.

மாமியின் கோபத்தை அந்த சாமி தான் தீர்த்து வைக்கணும்.

Read more about: asin trisha war begins

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil