»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தீபாவளியையொட்டி நாளை ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை போட்டி போட்டுக் கொண்டு வழங்கப் போகின்றன தமிழ்த் தொலைக்காட்சிகள்.

சன்னில் பாபா..

சன் டிவியின் தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக ரஜினிகாந்த்தின் லேட்டஸ்ட் படமான பாபா ஒளிபரப்பாகவுள்ளது. காலையில் விஜயகாந்த்தின்ரமணாவையும், மாலையில் பாபாவையும் ஒளிபரப்புகிறது சன் டிவி.

இதுதவிர சீயான் விக்ரமின் லைவ் பேட்டியையும் சன் ஒளிபரப்புகிறது. நேயர்களின் கேள்விகளுக்கு விக்ரம் பதிலளிக்கிறார்.

ஜெயாவில் கமல்

ஜெயா டிவியில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பிரகாஷ் ராஜின் சொந்தப் படமான அழகிய தீயே ஒளிபரப்பாகவுள்ளது. மற்றொரு முக்கியநிகழ்ச்சியாக கமல்ஹாசனும், அவரது படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர்கள், பாடகியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிஒளிபரப்பாகிறது.

விஜய்யில் சோனியா

விஜய்டிவியில் விக்ரமுடன் பைக் பயணம், பேட்டி, சோனியா அகர்வாலின் பேட்டி, ஜாஸ் திரைப்படம், இளம் பாடகர்களின் இசை நிகழ்ச்சிகள் உள்பட பலநிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

ராஜ் டிவியில் சிம்பு:

மற்றொரு முக்கிய சானலான ராஜ் டிவியில் கமல்ஹாசனின் தெனாலி ஒளிபரப்பாகிறது. சிம்பு, அபர்ணா, மதுமிதா ஆகியோருடன பேட்டி உள்பட பலநிகழ்ச்சிகள்.

கே டிவியில் சினிமா.. சினிமா..

சன் டிவியின் துணை டிவியான கேடிவியில் மும்தாஜில் ஆரம்பித்து மானா, கருணாஸ், ரீமா சென், சோனியா அகர்வாலின்பேட்டிகள் தவிர சேது திரைப்படமும் அலைபாயுதே படமும் காட்டப்படவுள்ளது.

டிடியின் பொதிகையில்..

பொதிகை டிவியிலும் இசை, பண்முக, நிகழ்ச்சிகள் வரிசை கட்டி வருகின்றன.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil