»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

உமா ரொம்பவே வைராக்கியமாக இருக்கிறார். அக்கா, தங்கச்சி ரோலாக இருந்தாலும் சரி. அதில் தான் நடிப்பேனே தவிர கவர்ச்சி காட்டித் தான்வாய்ப்புக்களைப் பெற வேண்டும் என்ற அவசியம் வந்தால், அந்த வாய்ப்பே தனக்கு வேண்டாம் என்று மறுத்துவிடுகிறார்.

இதுவரை இவரது வைராக்கியத்திற்கு பலன் கிடைக்காமல் இருந்து வந்தது. இப்போது உமாவை புரிந்து கொண்டு அவரைத் தேடி நல்ல ரோல்களுடன்தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வர ஆரம்பித்துள்ளனர்.

அந்தக் கால ஹீரோயின் சுமித்ராவின் சீமந்தப் புத்திரிதான் உமா. தாய் மொழி கன்னடமானாலும், அம்மா வெற்றி பெற்ற தமிழில்தான் அறிமுகம்ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தாராம்.

ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சிக்கு தடாவோடு பொடாவும் போட்டுவிட்டதால் உமாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும்அவர் அசரவில்லை. கிடைக்கிற வாய்ப்புகளை வைத்துகாலம் தள்ளி வந்தார். அவ்வப்போது விளம்பரப் படங்களிலும் தலை காட்டினார்.

பாரதிராஜாவின் கடல் பூக்கள், தங்கர் பச்சனானின் தென்றல் ஆகிய படங்களில் அவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. கவர்ச்சி காட்ட மாட்டேன்என்பதில் படு உறுதியாக உள்ள உமாவுக்கு இப்போது நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இதனால் மிக உற்சாகத்தில் இருக்கிறார்.

பிரஷாந்த்துடன் (ஜோடியாக அல்ல, தங்கச்சியாக) அடைக்கலம், அகத்தியனின் வேடந்தாங்கல், புவனா என்பவரின் இயக்கத்தில் ரைட்டா தப்பா என பலபடங்கள் உமாவின் கைவசம் உள்ளன.

குடும்பப் பாங்கான படங்களில் நடிப்பதுதான் எனது லட்சியம், அதுதான் கடைசி வரை நிலைக்கும், கவர்ச்சிக்கு குறுகிய எல்லைதான் என்கிறார் உமா.

வாழ்க வளமுடன்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil