»   »  கன்னட ஹீரோ.. தமிழில் வில்லன்

கன்னட ஹீரோ.. தமிழில் வில்லன்

Subscribe to Oneindia Tamil

கன்னடத்தில் பிரபல ஹீரோவாக விளங்கும் உபேந்திரா, விஷால் நடிக்கும் சத்யம் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.

கன்னடத்தில் பிரபல ஹீரோக்களே வில்லன் ரேஞ்சில்தான் படு விகாரமாக இருப்பார்கள். ஒன்றிரண்டு பேர்தான் வித்தியாசமாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் உபேந்திரா. ஒரு காலத்தில் கன்னடத் திரையுலகில் வித்தியாசமான படங்களைக் கொடுத்து வந்தவர் ரவிச்சந்திரன். கிரேஸி ஸ்டார் என்றுதான் அவருக்கு செல்லப் பெயர்.

பாடல்களில் பல புதுமைகளைப் புகுத்தி அசத்துவதில் ரவிக்கு நிகர் ரவிதான். இது கன்னடப் படம்தானா என்று சந்தேகப்படும் அளவுக்கு படத்தில் பல நல்ல விஷயங்களை இடம் பெறச் செய்வார். இதனாலேயே அவர் மீது கன்னடத் திரையுலகினருக்கு ரொம்பவே காட்டம் (பை தி வே, ரவிச்சந்திரன் தமிழ்நாட்டுக்காரர்)

இப்போது ரவிச்சந்திரனைப் போலவே புதுமையான கதை அமைப்பது, காட்சிகளை செட் செய்வது என அட்டகாசம் செய்து வருபவர் உபேந்திரா. அவரது முதல் படம் முதல் லேட்டஸ்ட் படம் வரை ஒவ்வொரு படமும் ஒரு வெரைட்டியில் இருக்கும்.

இந்த உபேந்திரா இப்போது தமிழில் வில்லனாக நடிக்கவுள்ளார். விஷால் நடிக்க, ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் சத்யம் படத்தில் நீங்கள்தான் வில்லனாக நடிக்க வேண்டும் உபேந்திராவை அணுகியுள்ளனர். அதை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளாராம்.

இந்தப் படத்தில் விஷால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்க காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருபவர் நயனதாரா.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், ஆர்.டி.ராஜசேகர் கேமராவைக் கவனிக்கிறார். படத்தின் அத்தனை ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், இப்படத்தை 2 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளார் விஷால்.

அந்த இடைவெளியில் பூபதிபாண்டியன் இயக்கத்தில் மலைக்கோட்டை படத்தில் நடிக்கவுள்ளார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil