»   »  விவாகரத்து பெற்றார் ஊர்வசி

விவாகரத்து பெற்றார் ஊர்வசி

Posted By:
Subscribe to Oneindia Tamil


நடிகை ஊர்வசிக்கும், அவரது கணவர் மனோஜ் கே. ஜெயனுக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது

Click here for more images

முந்தானை முடிச்சு படம் மூலம் நடிகையானவர் ஊர்வசி. கேரளத்தைச் சேர்ந்த ஊர்வசியும் மனோஜும் 7 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இருவரும் சென்னையில் தங்கியிருந்து தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வந்தனர். சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் விரிசல் வரவே இருவரும் பிரிந்தனர்.

ஊர்வசி சென்னையிலும், மனோஜ் கேரளாவிலும் வசித்து வந்தனர். இவர்களை மீண்டும் சேர்த்து வைக்க சிலர் எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து இருவரும் சட்டரீதியாக விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர்.

இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

ஊர்வசி தனது மகளை, மனோஜ் கே.ஜெயனிடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Read more about: urvasi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil