»   »  இந்தியன் பனோரமாவுக்கு வாகை சூட வா தேர்வு!

இந்தியன் பனோரமாவுக்கு வாகை சூட வா தேர்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாகை சூட வா படத்துக்கு மேலும் மேலும் புதிய அங்கீகாரங்கள் கிடைத்து வருகின்றன. லேட்டஸ்டாக இந்தப் படத்தை இந்தியன் பனோரமாவுக்கு தேர்வு செய்துள்ளனர்.

சற்குணம் இயக்கத்தில் விமல், இனியா ஜோடியாக நடிக்க, முருகானந்தம் தயாரித்த படம் 'வாகை சூடவா'.

தேசிய விருது உள்பட ஏராளமான விருதுகளை இந்தப் படம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்றுள்ளது. நார்வே திரைப்பட விழாவில் 7 விருதுகளை அள்ளியது இந்தப் படம். இப்போது இந்தியன் பனோரமாவுக்கு தேர்வாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் சற்குணம் கூறுகையில், 'இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வாவது சாதாரண விஷயமல்ல. காரணம் தேசிய விருதுக்கு அடுத்தபடியான பெருமை இந்தப் பிரிவுக்கு உண்டு.

மலையாளத்தில் 5 படங்களும், மராத்தி, பெங்காலியில் தலா 3 படங்களும் ஆக மொத்தம் 20 படங்கள் இந்தப் பிரிவுக்கு தேர்வாகி உள்ளன. இதில் தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் 'வாகை சூடவா' என்பது பெருமையாக உள்ளது.

English summary
Sargunam's period film Vaagai Sooda Vaa has selected for Indian Panorama.
Please Wait while comments are loading...