»   »  இந்திரலோக சுந்தரி தீர்த்தா

இந்திரலோக சுந்தரி தீர்த்தா

Subscribe to Oneindia Tamil

வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் குழந்தைகளை டார்கெட் செய்து தான் எடுக்கப்பட்டு வருகிறதாம். இந்த ஆண்டின் மிகப் பெரிய பொழுது போக்குப் படமாக இது இருக்கும் என்கிறார்கள்.

இந்திரலோக சுந்தரிகளுடன் படு குஜாலாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் வடிவேலு.

மதுரையில் இருந்து தனி ஆளாக வந்த வடிவேலு இன்று வரை 450 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். புலிகேசியைத் தொடர்ந்து இப்போது ஹீரோவாக இந்திரலோகத்தில் படத்தில் நடித்து வருகிறார்.

புலிகேசிக்குப் பின் இனி நேரா ஹீரோ ரோல் என்பதில் தீவிரமாக இருந்த வடிவேலுவின் மனதை மாற்றியவர் ராமையா என்பவராம். இவர் தான் இந்திரலோகத்தில் படத்துக்கு மூலக் கதையை கொடுத்தவராம். கதையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த வடிவேலு உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

இதில் வடிவேல் ட்ரிபிள் ஆக்டாம், அதாங்க 3 வேடங்களில் நடிக்கிறாராம். கதைப்படி அழகப்பன் என்ற மனிதன் (வடிவேலு) பூமியிலிருந்து உயிரோடு இந்திரலோகத்துக்கு போகிறான். அங்கு ஒளிந்திருந்து இந்திரலோகத்தில் நடக்கும் கூத்துக்களை பார்க்கிறான்.

இந்திரலோகத்தில் இருக்கும் இந்திரன் தன்னை போல் இருப்பதை பார்த்த மானிடனுக்கு ஆச்சரியம். அதன் பின்பு அதே போல் எமலோகம் போகிறான். அங்கு எமனும் இவனை போலவே இருக்கிறானாம்.

இந்திரலோகத்தில் இந்திரன் வேடத்தில் அந்தப்புறத்துக்குச் சென்று வடிவேலு போடும் ஆட்டம் செம கூத்தாம்.

3 கேரக்டர்களும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்ள கதையில் திருப்பமாம். இந்த சந்திப்புக் காட்சி தான் படத்தின் ஹை-லைட்டாம்.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பதற்காக வடிவேலுவுக்கு லப்பம் பார்க்க (அதாங்க மேக்கப் போட) ஒன்றரை மணி நேரம் ஆகிறதாம்.

இப்படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிவடைந்துவிட்ட நிலையில் இறுதிக் கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இனி ஏகப்பட்ட கிராபிக்ஸ் வேலைகள் செய்ய வேண்டியுள்ளதாம். இதனால் எல்லாம் முடிந்து படம் எப்போது ரிலீசாகும் என்பது தயாரிப்பு தரப்புக்கே குழப்பமாக உள்ளாதாம்.

இதில் நடிக்க கோலிவுட் ஹரோயின்கள் யாரும் முன் வராததால் இங்கிலாந்தில் சில காலம் வசித்த பெங்களூர் பெண்ணான தீர்த்தா சர்மா என்பவர் நடிக்கிறார். பார்க்கவே மிக பிரமாண்டமாக இருக்கிறார் தீர்த்தா. படத்தில் இவர் இந்திரலோகத்து சுந்தரியாக நடிக்கிறார்.

Please Wait while comments are loading...