»   »  செம்ம கலாய்... முன்னணி நடிகர்களின் படத்தில் வடிவேலு இருந்தால்! #VadiveluForLife

செம்ம கலாய்... முன்னணி நடிகர்களின் படத்தில் வடிவேலு இருந்தால்! #VadiveluForLife

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் உலகம் முழுக்க விரவிக் கிடக்கும் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் வைகைப்புயல் வடிவேலு.

நமது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் அவரது வசனங்களின்றிக் கடப்பது அரிது. சாதாரண வார்த்தைகளையும் கூட தனது வித்தியாசமான ஸ்லாங்கால் வைரலாக்கி வைத்திருக்கிற மகா கலைஞன் அவர்.

சில ஆண்டுகளாக வடிவேலு தொடர்ச்சியாக நடிக்காவிட்டாலும், சமூக வலைதளங்களில் எங்கும் நிறைந்திருப்பதில் இருந்தே ரசிகர்கள் மனதில் அவரது ஆளுமையைப் புரிந்துகொள்ளலாம்.

 எங்கும் எப்போதும்

எங்கும் எப்போதும்

சமகால அரசியல் நிகழ்வுகளானாலும் சரி, பொதுவான செய்திகளானாலும் சரி, எல்லாவற்றிற்கும் அவரது வசனங்களும், உடல்மொழியும் பொருந்திப் போவதுதான் உச்சபட்ச ஆச்சரியம். அவர் ஆக்ட்டிவாக இல்லாத இந்தக் காலகட்டத்திலும் மீம் உலகம் முழுக்க அவரது முகமே தென்படுகிறது. வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷலாக முன்னணி நடிகர்கள் நடித்த காட்சியில் வடிவேலு நுழைந்தால் எப்படி இருக்கும் எனும் கற்பனையில் உருவாக்கப்பட்ட மீம்ஸ் சில இங்கே...

 கண்ணு வேணும்னு கேட்டியாமே

கண்ணு வேணும்னு கேட்டியாமே

'வேட்டையாடு விளையாடு' படத்தில், கமல்ஹாசன், 'கேட்ட மூட்றா...'' எனச் சொல்லிவிட்டு எதிரிகளைப் பந்தாடும் இடத்தில் வடிவேலு இருந்தால் இப்படித்தான் இருக்கும்.

 ஒரு கத சொல்லட்டா சார்

ஒரு கத சொல்லட்டா சார்

'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதியும், மாதவனும் அமரந்து பேசிக் கொண்டிருக்கும்போது 'ஒரு கத சொல்லட்டா சார்' எனக் கேட்பார். அந்த இடத்தில் வடிவேலு இருந்தால் டேபிளில் டான்ஸ் ஆடியிருப்பார்ல.

 ஷ்ஷப்பா என்னா எரிச்சல்

ஷ்ஷப்பா என்னா எரிச்சல்

'ஆடுகளம்' படத்தில் தனுஷ், 'ஒத்த சொல்லால...' பாட்டில் கைலியை தூக்க்கிப் பிடித்து ஆடுவார். வடிவேலு அந்த இடத்தில் கேஷுவலாக நடந்து போனா எப்படி இருக்கும்னு பாருங்க.

 பாக்குறியா பாக்குறியா

பாக்குறியா பாக்குறியா

'சிங்கம்' படத்தில், சூர்யா எதிரிகளைத் தூக்கியடிக்கத் தயாராகும்போது, 'ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா... பாக்குறியா பாக்குறியா...' என்பார். 'எங்க பாப்போம்...' என வடிவேலு உள்ளே நுழைந்தால் இப்படித்தான் இருக்கும்.

 மங்காத்தா டா

மங்காத்தா டா

'மங்காத்தா' படத்தின் தீம் சாங்கில் அஜித் ஆங்காங்கே உலவிக் கொண்டிருப்பதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். 'அப்ப நாங்கனாப்ள யாராம்...' என வைகைப்புயலும் களத்தில் இறங்கினால் எப்படி இருக்கும்..?

 கடல்லயே இல்லையாம்

கடல்லயே இல்லையாம்

'சிவாஜி' படத்தில் பொய்யான மோசடிப் புகாரால் சிறைக்குச் செல்லும் ரஜினியும், வட்டச் செயலாளர் வண்டுமுருகனும் ஒரே செல்லில் இருந்தால் எப்படி இருக்கும். இதோ இப்படித்தான்... 'கடல்லயே இல்லையாம்'.

 மலர் டீச்சர்

மலர் டீச்சர்

மலையாள சூப்பர்ஹிட் 'ப்ரேமம்' படத்தில் நிவின் பாலி மலர் டீச்சர் சாய் பல்லவியை ஒறண்டையிழுத்ததைப் பார்த்து முரட்டு தாதா நாய் சேகர் களத்துல இருந்தா இப்படி இருக்கும்.

 நானா கூட இருக்கலாம்

நானா கூட இருக்கலாம்

'தெறி' படத்தில் விஜய் , வில்லன் மகேந்திரனிடம் சீரியஸாக வசனம் பேசும்போது, 'ஏன்... கொன்னது நானா கூட இருக்கலாம்...' எனச் சொல்வார். அப்போ அந்த இடத்தில் வடிவேலு இருந்திருந்தா...

மீம்ஸ் உருவாக்கம் : குட்டி கிரி

English summary
Vadivelu is in everywhere in social media. It is the surprise most of his dialogues and body language to comply with contemporary political scenes or general news.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil