»   »  அய்யா... கெணத்தைக் காணோம்..! - வடிவேலுவின் குபீர் காமெடிகள்! #VadiveluForLife

அய்யா... கெணத்தைக் காணோம்..! - வடிவேலுவின் குபீர் காமெடிகள்! #VadiveluForLife

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தின் சார்லி சாப்ளின் எனப் போற்றப்படும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைதளங்களின் மூலம் தினம் தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிற வடிவேலு எனும் மகத்தான கலைஞனுக்கு நன்றி செய்யும் விதமாக அவர் நடித்த படங்களில் பெரும்பாலோனாரால் விரும்பப்படும் கேரக்டர்கள் சிலவற்றை நினைவு கூர்வோம்.

வடிவேலுவின் நடிப்பில் உருவான படங்களின் காமெடி காட்சிகளில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். உங்களுக்கு விருப்பமான காமெடிகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.

ஸ்டைல் பாண்டி

பாகவதர் ஸ்டைலில் 'ஸ்டைல் பாண்டி'யாக நடித்த வடிவேலு, நாய்க்குட்டியை எழுப்ப கரன்ட் ஷாக் கொடுப்பது, நூறாவது திருட்டு விழாவுக்கு அண்ணனின் விழுதுகள் என போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்துப் பதறுவது என ரசிகர்களுக்கு செமையான காமெடி ட்ரீட் கொடுத்தார்.

என்கவுன்டர் ஏகாம்பரம்

அர்ஜுனிடன் இணைந்து நடித்த 'மருதமலை' படத்தில் என்கவுன்டர் ஏகாம்பரமாக டெரர் காமெடி செய்வார் வடிவேலு. டெலக்ஸ் பாண்டியன் சீரியஸ் போலீஸாக காமெடி செய்தால் ஏகாம்பரம் சிரிப்பு போலீஸாக செய்தது காமெடி டிராஜெடி.

செல்லப்பா

பார்த்திபனும், வடிவேலும் சேர்ந்தால் அந்தப் படத்தில் நகைச்சுவைக்குப் பஞ்சமிருக்காது. பார்த்திபனின் குண்டக்க மண்டக்க பேச்சில் சிக்கி சின்னாபின்னமாவார் வடிவேலு. படம் நெடுக இருவரும் செய்யும் ரகளைகள் மட்டுமே இந்தப் படத்தின் ஹைலைட் எனச் சொல்லவும் வேண்டுமா?

ஏகாதசி

'உன் பேரென்ன...' 'டேவிட்டு...' 'இன்னிலேருந்து உன் பேரு ட்ராவிட்டு' என பாப்பம்பட்டி கிரிக்கெட் அணிக்கு ஆள் பிடிப்பதலிருந்து தொடங்கும் கேப்டன் ஏகாதசியின் அட்ராசிட்டி, க்ரவுண்டிலேயே பேட்டால் தட்டி தண்ணி வர வைப்பது, மைதானத்தில் குப்புறப் படுத்து அப்படியே தூங்கிவிடுவது என சத்யராஜின் லொள்ளோடு ஏகாதசி ஏகபோக காமெடி செய்திருப்பார்.

உடும்பன்

'கெணத்தைக் காணோம்...' என லஞ்சத்திற்கு எதிராக விபரீதமாக வெகுண்டெழுந்த உடும்பன் காமெடிகள் அதகள ரகளை. 'இந்தப் பக்கம் ஐநூறு தென்னை.. இந்தப் பக்கம் ஐநூறு வாழை...' 'வட்டக் கிணறு... வத்தாத கிணறு' என கொளுத்திப் போட்ட உடும்பன் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தார்.

இன்னும் இவைபோன்று நீங்கள் ரசித்த வேறு வடிவேலு கேரக்டர்களை கமென்ட்டில் குறிப்பிடுங்களேன்...

English summary
Thanks to the great artist Vadivelu, who is celebrated everyday by social media. We recall some of his characters that we liked most of his films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil