twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பெஷல்ஸ்

    By Staff
    |

    இனிமேல் வைரமுத்துவின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கேட்க முடியாது போலிருக்கிறது. அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே லடாய்முற்றி விட்டதாம்.

    ரோஜாவில் ஆரம்பித்து அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள பாபா வரை வைரமுத்துவும், ஏ.ஆர்.ரஹ்மானும் கைகோர்த்து வந்தார்கள், இடையிடையே சிலபிரிவுகளுடன்.

    வைரத்துவின் வார்த்தை ஜாலங்களுக்கு ரஹ்மானின் இசை ஈடுகொடுத்து எண்ணற்ற ஹிட் பாடல்களை உருவாக்கியது. வைரமுத்துவுக்கு இரண்டு முறை தேசியவிருதையும் ரஹ்மானின் இசையில் வந்த பாடல்கள் பெற்றுக் கொடுத்தன.

    ஆனால் சமீப காலமாக வைரமுத்துவை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார் ரஹ்மான். தெனாலியில் இந்த புறக்கணிப்பு ஆரம்பித்தது. முழுக்க முழுக்கஇளைஞர்களை, புதியவர்களை வைத்து அந்தப் படத்தில் பாடல்களை வாங்கினார் ரஹ்மான். தெனாலியில் பாடல்கள் ஹிட் ஆகவில்லை.

    இந் நிலையில் பாபா படம் உருவானது. ரஜினியின் யோசனைப்படி வைரமுத்துவிடம் வந்தார் ரஹ்மான். ஆனால் பாபா படப் பாடல்கள்உருவாக்கத்தின்போது இருவருக்கும் இடையே மீண்டும் லடாய் ஏற்பட்டு விட்டதாம்.

    லண்டனில் உட்கார்ந்துள்ள ரஹ்மான் அங்கிருந்து போன் மூலமே டியூன்களைச் சொல்லி பாட்டுக்களைக் கேட்டார். வாலியிடம் தொலைபேசியில் ட்யூனைச்சொல்லி அதற்குப் பாட்டுக்களை எழுதி அதை லண்டனுக்கு அனுப்பி பாட்டுக்களை பதிவு செய்தார்கள்.

    அதே போலவே வைரமுத்துவிடமும் போன் மூலம் ட்யூன் கொடுக்கப்பட்டது. அதற்கு பாட்டும் கேட்டார் ரஹ்மான். இது வைரமுத்துவுக்கு பெரும்அதிருப்தியை ஏற்படுத்தி விட்டதாம். இருந்தாலும் அந்த நேரத்தில் லண்டன் செல்ல வேண்டிய அவசியம் வந்ததால் அங்கு சென்று பாடலை எழுதித் தந்தார்வைரமுத்து. ஒரு பாடலைத் தான் அவ்வாறு பதிவு செய்ய முடிந்தது.

    மற்ற பாடல்களை தொலைபேசி மூலம் தான் கேட்டுப் பெற்றார் ரஹ்மான். இந்த புதிய முறை வரிகளை சிதைத்து விடும் என்ற கருத்து கொண்ட வைரமுத்துஇது தொடர்பாக ரஹ்மானிடம் மோதியதாகக் கூறப்படுகிறது.

    நல பாடல் உருவாக வேண்டுமானால் இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் அமர்ந்து பாட்டமைத்து, மெட்டமைத்து, சீர் செய்து பாடலை உருவாக்கவேண்டும். போன் மூலம் ட்யூன் கேட்டு அதற்கு பாட்டு எழுதினால் அது சரியாக வராது என்று வைரமுத்து கூற ரஹ்மான் எரிச்சலைடந்தாகத் தெரிகிறது.

    இதையடுத்து ரஜினி தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினாராம். ரஜினி தலையிட்டதால் பாடலை எழுதித் தந்தாராம் வைரமுத்து. அதே போலரஜினிக்காக வைரமுத்துவுடன் அந்தப் படத்தில் தொடர்ந்து பணி புரிய ஒப்புக் கொண்டார் ரஹ்மான் என்கிறார்கள்.

    இதையடுத்து இனிமேல் ரஹ்மான் இசையில் பாட்டு எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வைரமுத்து வந்துவிட்டார். அதே போல வைரமுத்துவை இனி தான் இசைஅமைக்கும் படங்களில் சேர்ப்பதில்லை என்ற முடிவுக்கு ரஹ்மானும் வந்துவிட்டார்.

    ஏற்கனவே, ரஹ்மானின் இசை வார்த்தைகளை பின்னுக்குத் தள்ளி விடுகிறது என்ற புகார் உள்ளது. இப்போது போன் மூலம்தான் பாட்டு எழுத வேண்டும்என்ற வித்தியாசமான முறையை அமல்படுத்தத் தொடங்கியுள்ளார் ரஹ்மான். இது நல்ல தமிழ் பாடல்களுக்கு வழி வகுக்குமா என்பதை பாபா படத்தின்கேசட்டை கேட்டுவிட்டுத் தான் முடிவு செய்ய முடியும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X