»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஜெமினி படத்தை தூக்கி நிறுத்திய பாட்டாக "ஓ போடு..." இருந்திருக்கலாம். ஆனால் அந்தப் பாட்டை எழுதிய வைரமுத்து படாத பட்டு விட்டாராம்.

தீந்தமிழில் தித்திக்க வைக்கும் வரிகளைப் போட்டு எங்களையெல்லாம் தமிழ் என்னும் குற்றாலச் சாரலில் நனைய வைத்த நீங்களா இப்படிப்பட்டபாட்டுக்களை எழுதுவது என்று வைரமுத்துவின் நண்பர்கள் முதற் கொண்டு பார்ப்பவர்கள் எல்லாம் விமர்சித்து தள்ளி விட்டார்களாம்.

இதனால் நொந்து போய் விட்ட வைரமுத்து இனிமேல் இப்படிப்பட்ட பாட்டுக்களை எழுதப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.

வைரமுத்துவின் இந்த அருமையான முடிவுக்காக எல்லாரும் ஒரு "ஓ" போடுங்க பார்ப்போம் !

யார் இந்த ஹாரிஸ் ஜெயராஜ்?

ஒரு ஆண்டு போன பின்னரும் கூட "மின்னலே"யின் "வசீகரா..."வை யாரும் இன்னும் மறந்திருக்க முடியாது.

"மின்னலே" கொடுத்த ஹிட் ஹாரிஸ் ஜெயராஜை புகழின் உச்சியில் கொண்டு வந்து நிறுத்தியது. அதற்குப் பிறகு "மஜ்னு", "12பி" என சில படங்களுக்கு அவர்இசையமைத்துள்ளார்.

இப்போது விக்ரம் நடிக்கும் "சாமுராய்", ஷாம்-மாதவன்-திரிஷா நடிக்கும் "லேசா லேசா" போன்ற படங்களுககு இசையமைத்து வருகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் குறித்து சில தகவல்கள் இதோ உங்களுக்காக...

இவரது தந்தை மோசஸ் ஜெயக்குமார் ஒரு கிடார் கலைஞர். அவரிடமிருந்து தான் இவர் இசையைக் கற்றுக் கொண்டார்.

தனியாக இசையமைப்பாளர் ஆகும் முன்பு சங்கர் கணேஷ், டி. ராஜேந்தர், கார்த்திக் ராஜா, ரஹ்மான் ஆகியோரிடம் இவர் கீபோர்டு வாசித்துள்ளார்.

இவருக்குப் பிடித்த இசையமைப்பாளர்கள் "மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் "இசை ஞானி" இளையராஜா.

ரஹ்மானிடம் சில காலம் உதவியாளராக இருந்தபோது அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டதை வைத்துத் தான் இசையமைப்பாளராக மாற முடியும் என்றநம்பிக்கையே இவருக்கு வந்ததாம்.

ஒரு படத்திற்கு இசையமைக்கும் காலம் அதிகமாக இருப்பாதலும், நல்ல படங்களுக்கு மட்டுமே இசையமைப்பது என்ற முடிவில் இருப்பதாலும் குறைவானபடங்களையே இவர் செய்கிறாராம்.

பாட்டு எழுதிய பிறகே இவர் மெட்டமைக்கிறாராம். "வசீகரா..."வை அதற்கு நல்ல உதாரணமாக சொல்கிறார். இதுபோலவே பலபடங்களுக்கும் மெட்டமைத்துள்ளாராம்.

படங்கள் தவிர கோக-கோலா, டைட்டன் குவார்ட்ஸ், பிளாக் தண்டர் உள்ளிட்ட சில விளம்பரங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார்.

ராசாவை நாடிய நாசர்

இளையராஜாவிடம் சரணடைந்திருக்கிறார் "மூக்கழகன்" நாசர். ஏன்?

மோகன்லால், சிம்ரன் மற்றும் அவரது தங்கை ஜோதி நவ்வால் ஆகியோரை வைத்து நாசர் இயக்கி வரும் "பாப்கார்ன்" அருமையாக வளர்ந்துவருகிறது.

அட்டகாசமான படமாக இது உருவாகி வருவதால் படத்திற்கு முழு உயிரோட்டம் கொடுக்க ஒரே ஒருவரால் தான் முடியும் என்று நினைத்தார் நாசர். அவர்தான் இளையராஜா.

"பாப்கார்ன்" படத்திற்கு இசை அமைப்பது "இளைய" ராஜாவான யுவன் ஷங்கர் ராஜா என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தானே! இவர்பாட்டுக்களுக்கு மட்டும் இசையமைக்கவுள்ளார்.

ஆனால் ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் பின்னணி இசையும் முக்கியமானது என்பதால் படத்தின் பின்னணி இசையை மட்டும் இளையராஜாவிடம் கொடுக்கவிரும்பினார் நாசர்.

இதையடுத்து நேராக ராஜாவிடம் போனார். சொன்னார். அவரும் கேட்டு விட்டு ஓ.கே. சொல்லி விட்டாராம். இப்போது டபுள் சந்தோஷத்துடன் படத்தைகுஷியாக எடுத்து வருகிறார் நாசர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil