»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பொங்கல் தினத்தையொட்டி நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக கவிப் பேரரசு வைரமுத்து ஜப்பான்செல்கிறார்.

ஜப்பான் தமிழ்ச் சங்கம் இந்தப் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தலைநகர் டோக்கியோவில்நடைபெறும் இந்த விழாவுக்கு வைரமுத்து தலைமை தாங்குகிறார்.

இதற்காக இன்று இரவு அவர் விமானம் மூலம் ஜப்பான் செல்கிறார். வைரமுத்து பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம்:

வைரமுத்துவின் 50வது பிறந்த நாளையொட்டி சுகுபா நகரில் பாராட்டு விழா நடக்கிறது. ஜப்பான் வாழ் தமிழர்கள்இதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பின்னர் 11ம் தேதி மாலை டோக்கியோவில் பொங்கல் விழா நடக்கிறது. சங்கப் பொதுச் செயலாளர் அருள்எழுதியுள்ள "முதல் பார்வை" என்ற கவிதைத் தொகுப்பை வைரமுத்து வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு கியோடோ நகரில் தமிழ் பயிலும் ஜப்பானிய மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில்வைரமுத்து கலந்து கொள்கிறார். பின்னர் 15ம் தேதி சென்னை திரும்புகிறார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil