»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நகைச்சுவை நடிகர் வையாபுரிக்கு அடுத்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடக்கிறது.

தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் வையாபுரியும்ஒருவர். இவர் துள்ளாத மனமும் துள்ளும், அமர்க்களம், கண்ணோடுகாண்பதெல்லாம், பார்த்தேன் ரசித்தேன் உள்பட பல வெற்றிப் படங்களில்நடித்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக பெண் தேடி வந்தார் வையாபுரி. ஆனால் எதுவும் அமையவில்லை.இவருக்காக சக நகைச்சுவை நடிகர்களான சார்லி, தாமு ஆகியோரும் பெண் தேடிவந்தனர். இந்த நிலையில், என்னவளே பட இயக்குனர் சுரேஷ் மூலம் வையாபுரிக்குபெண் கிடைத்தது.

தாராபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகளான ஆனந்தி என்பவரை அடுத்தமாதம் 11-ம் தேதி வடபழனியில் திருமணம் செய்து கொள்கிறார் வையாபுரி. ஆனந்திப்ளஸ் 2 வரை படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.இருவரது திருமண நிச்சயதார்த்தம் இந்த மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது.

Read more about: chennai cinema tamilnadu vaiyapuri

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil