»   »  முடிவுக்கு வரும் வந்தனா கேஸ்

முடிவுக்கு வரும் வந்தனா கேஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் ஸ்ரீகாந்த், வந்தனா வழக்கை முடிவுக்குக் ெகாண்டு வர போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்ப வந்தனா தொடர்பாக ஸ்ரீகாந்த் கொடுத்த புகார் மீதான அறிக்கை தயாரிக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தமிழ் சினிமாவை சமீபத்தில் கலக்கிய நிஜக் கதை வந்தனா, ஸ்ரீகாந்த். முதலில் திருமண அறிவிப்பு வெளியானது. சில நாட்களிலேயே ஆண்டி கிளைமாக்ஸ் போல வந்தனா குறித்த பல தகவல்கள் வெளியாகின. இதனால் திருமணத்திலிருந்து ஸ்ரீகாந்த் தரப்பு பின் வாங்கியது.

இதனால் வெகுண்டெழுந்த வந்தனா, ஸ்ரீகாந்த் வீட்டில் அதிரடியாக குடியேறி கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத புதிய திருப்பமாக, வந்தனாவை தனது மனைவியாக ஏற்றுக் ெகாள்ள ஸ்ரீகாந்த் முடிவெடுத்தார். அவரது வீட்டினரும் சம்மதித்தனர். இதையடுத்து இந்தப் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

இந்தப் பின்னணியில், தனது வீட்டுக்குள் வந்தனா அத்துமீறி நுழைந்தது தொடர்பாக ஸ்ரீகாந்த் தரப்பில் ெகாடுக்கப்பட்ட புகாரை விசாரித்த போலீஸார் அந்த விசாரணையை முடித்துள்ளனர். அதில் வந்தனா எந்தத் தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரை வட பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வயேலா பாய் விசாரித்தார். வழக்கை விசாரித்த போலீஸ் தரப்பு வந்துள்ள முடிவு இதுததான்.

ஸ்ரீகாந்த் - வந்தனா இருவரும் மனதார காதலித்துள்ளனர். ஆனால் ஸ்ரீகாந்தின் குடும்பம் இதை ஏற்கவில்லை, கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து காக்கிநாடாவில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முறைப்படி பதிவு செய்துள்ளனர்.

அதன் பின்னர் வந்தனாவின் வீட்டில் இருவரும் குடித்தனம் நடத்தியுள்ளனர். அங்கு குடித்தனம் நடத்தியபடியே தனது பெற்றோரிடம் பேசிப் பேசி ஒரு வழியாக சம்மதம் வாங்கினார் ஸ்ரீகாந்த்.

அதன் பின்னர்தான் இருவருக்கும் ஊரறிய திருமணம் நடத்த ஸ்ரீகாந்த் வீட்டில் முடிவெடுத்தனர். இந்த நிலையில், வந்தனாவின் அண்ணன் ஹர்சவர்தன் மீதுள்ள வங்கி மோசடி புகாரால் இந்த திருமணத்திலிருந்து ஸ்ரீகாந்தின் பெற்றோர் பின்வாங்கியுள்ளனர்.

ஆனால் இதை ஸ்ரீகாந்த் விரும்பவில்லை. அதேபோல வந்தனாவும் பயந்து விட்டார். எங்கே ஸ்ரீகாந்த் தன்னை கைகழுவி விடுவாரோ என்று பயந்த அவர் தனது பெற்றோருடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தார்.

வீடு தேடி வந்த வந்தனாவை வரவேற்ற ஸ்ரீகாந்த்தும், அவரது சித்தப்பா நரசிம்மனும் சாப்பாடு வாங்கிக் கொடுத்துள்ளனர். கார் பார்க்கிங்கிலேயே வைத்துப் பேசியுள்ளனர். பின்னர் தனது பெற்றோருடன் பேசதி முடிவு ெசால்வதாக கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.

ஆனால் அப்பாவும், அம்மாவும் வந்தனா வேண்டாம் என்று கூறி விட்டனர். இதனால் அப்செட் ஆன ஸ்ரீகாந்த் அங்கிருந்து போய் விட்டார். பின்னாலேயே அவரது பெற்றோரும் போயுள்ளனர்.

என்ன நடக்கிறு என்று புரியாமல் விழித்த வந்தனா வீட்டுக்குள் ெசன்று வரவேற்பறையில் அமர்ந்துள்ளார். அவரை அங்கேயே விட்டு விட்டு அவரது பெற்றோரும் போயுள்ளனர்.

வந்தனா அத்துமீறி வீட்டுக்குள் நுழையவில்லை. யாரையும் மிரட்டவில்லை. ரவுடிகளையும் உடன் அழைத்து வரவில்லை. அவரது கணவர் ஸ்ரீகாந்த். அவரது வீட்டுக்கு வந்தனா வர அனைத்து உரிமைகளும் உள்ளன.

எனவே ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரில் உண்மை இல்ைல என்று போலீஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவுள்ளது.

மேலும், ஸ்ரீகாந்த்தும், வந்தனாவுடன் சமரசமாகப் போக முடிவு செய்து விட்டதால் இந்த அறிக்கையை வைத்து வழக்கை முடிவுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil