»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தனது பாய் பிரண்டையே திருமணம் செய்து கொள்ளப் போகிறார் வசுந்தரா தாஸ். பிரபல ஜாஸ் இசைக்கலைஞரான ராபர்ட்டோ நாராயணன் தான் அந்த லக்கி மேன்.

பெங்களூரைச் சேர்ந்த இந்த இருவருமே மிக நெருங்கிய நண்பர்கள். இருவருமே தமிழ் ஐயங்கார்கள் தான்.

கல்லூரியில் படிக்கும்போதே நாராயணனின் ட்ரூப்பில் பாடல்களைப் பாடியுள்ளார் வசுந்தரா.

நட்பு, காதலாகி இப்போது திருமணத்தில் முடியப் போகிறது.

பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஜாஸ் இசைக் குழுவில்டிரம்ஸ் வாசிக்கும் கலைஞராக உள்ளார் ராபர்ட்டோ. பல சர்வதேச இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.

முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி... பாடல் மூலம் வசுந்தரா தமிழுக்கு அறிமுகமானாலும் அவரை நடிப்புக்குஇழுத்து வந்தவர் கமல்.

ஹே ராம் படத்தில் நடித்த கையோடு மூலம் தமிழில் அறிமுகமான வசுந்தரா பின்னர்சிட்டிசன் படத்தில் தலை காட்டினார்.

அதற்குப் பின் சான்ஸ்கள் இல்லாமல் போகவே மலையாளம் மற்றும் ஹிந்திக்குப் போனார். அங்கும் நிலைக்கமுடியவில்லை.

இதையடுத்து பெங்களூரிலேயே மீண்டும் செட்டில் ஆகிவிட்ட வசுந்தராவைத் தேடி ஒரு கன்னட பட சான்ஸ்வந்தது. படத்தின் பெயர் லங்கேஷ் பத்ரிகா. இதில் ஒரு புதுமுகத்துடன் நடித்தார். இதன் பிறகு எந்த சான்சும்இல்லை.

இதையடுத்து திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டார் வசுந்தரா.

திருமணமாகிவிட்டாலும்தொடர்ந்து நடிக்கவும் பாடவும் தயாராகவே இருக்கிறாராம்.

மணி ரத்னத்தின் அலைபாயுதே படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஷாலினி நடிக்க இருந்த ரோலில் முதலில் நடிக்கஇருந்தவர் வசுந்தரா தான் தெரியுமோ?.

கடைசி நேரத்தில் அந்த சான்ஸ் கை நழுவிப் போனதில் இன்னமும்வசுந்தராவுக்கு வருத்தம் உண்டாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil